உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குதம்பைச் சித்தர்

125

காரியம் பிற்பட்டதென்றும் உலகநூல் கூறும். உலகம் தொல் பழமையானது என்றும் இறை அதிற்பெரிய தென்றும் உயர்ந்தோர் கூறுவர்; படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளலாம் ஐந்தொழிற்கும் உரியோன் இறைவன் என மந்திரங்கள் கூறும்; யானை முதலாக எறும்பு ஈறாக அனைத்துயிரும் தந்தவன் றைவன்; மண்ணை அளந்தாலும், பொருள்களின் எண்ணை, அளக்க இயலாது. இறைவன் முதலும் முடிவும் ஆனவன்; உயிரும் அறிவும் மனமும் அருளியவன்; தூய்மை, எவரும் தோற்றுவியாது தானே தோன்றல், உயர்குணம், குறைவிலா நிறைவு, நிலைபேறு ஆகிய எல்லாமும் அமைந்தவன்; எங்கும் விரிந்தவன்; ஈகையாளன்; கண்ணில் காண்டற் கரியவன்; உருவ மற்றவன்; உலகைப் படைக்க அவன் எண்ணுமளவிலே உலகம் தோன்றிவிடச் செய்தவன்; வெட்ட வெளிக்குள் அண்டங்களை நிற்கச்செய்தவன்; கருவிகள் இல்லாமலே அண்டங்கள் உருவடையச் செய்தவன்; நிலங்காவல் புரியும் வேந்தனைப் போல், உலகெலாம் காவல் புரிபவன். உலகம் தோன்று முன்னரே தோன்றியவன்; எவ்வுயிர்க்கும் எவ்வுலகுக்கும் இறுதியானவன்; இறங்கி வந்து அருளிச்செய்யும் தன்மையால் இறைவன் அறியாதது ஓர் அணுத்தானும் இல்லை; இறைவன் முத்தொழில் செய்யாக்கால் உலகமே தோன்றியிராது; இறைவன் திருநிறை சிறப்பைச் சொல்ல எவருக்கே இயலும்?

3. வீடடையும்வழி : (51-61)

குதம்பாய், ஒப்பிலா ஒருவனைப் பற்றிக் கொண்டவர்க்கு வீடுபேறு வாய்த்திடும்; பற்றற்ற இறைவனைப் பற்றிக்கொள்ளக், கற்றுக்கொண்டவர்க்குக் கட்டாயம் வீடுபேறாம்; கட்டற்ற கட்டினைக் கட்டிப் பிடித்தார்க்கு, என்றும் நிலைத்த வீடு பேறாகும்; ஒருமையுள் ஆமையைப் போல் ஐம்புலனையும் அடக்கி அமைந்தார்க்கு வீடுபேறாம்; குரங்குபோல் தாவும் மனத்தை அடக்கி வைத்தவர்க்கு வீடுபேறு வாய்க்கும்; அகக் கருவிகளையெல்லாம் அடக்கினால் இறைவனே உறவாகி நிற்பான்; கன்றை விடாமல் தொடரும் ஈற்றுப்பசுவைப்போல் இறைவனைத் தொடுத்தால் வீடுபேறாம்; கையிற் கனியெனக் குற்றமற்ற இறைமையில் ஒன்றிவிட்டால் வீடுபேறாம்; நிலைத்த இறையை நீங்காமல் கூடினால் வீடுபேறேயாம்.

4. உடலைப்பழித்தல் : (62-70)

குதம்பாய், சொல்லரிய நாற்றம் பெருகும் உடலுக்கு மணங்கூட்டுவதும் எதற்காகவோ? மலமும், நெடியும் மல்கிய