உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126

இளங்குமரனார் தமிழ்வளம் - 37

உடலுக்கு மணமும் பூச்சும் எதற்காகவோ?ஆடையழகும், அணிகல அழகும் வெளி அழகே அல்லவோ? ஒன்றுக்கு ஒன்று மாறுபாடாகிப் போரிட்டுப் புழுத்துப் போவதும், சீழும் நீரும் திரண்டதும், காகங்கழுகுகள் களித்து உண்பதும் கோவணத் தோடே கொளுத்தப்படுவதும் ஆகிய உடலுக்கு நீராட்டம் ஏன்? ஆராய்ச்சி ஏன்? ஊர்திகள் பூமெத்தைகள் ஏன்?

5. மயக்கும் மாதரைப் பழித்தல் : (71-82)

குதம்பாய், மலைபோன்ற மார்பு இடையே வந்ததன்றோ? கண்ணில் தீட்டிய மையோ, கையால் வாவென அழைப்பது போல்வதன்றோ? முல்லை போலும் பல், ஒருநாள் சுடுகாட்டில் உதிர்ந்து கிடக்குமேயன்றோ? கிளி போலும் மொழி, ஒருநாள் குழறி அழியுமேயன்றோ? பருவத்தில் நிமிர்ந்த மார்பும், முதுமையில் வீழ்ந்துபடுமேயன்றோ? பொலிவொடு தோன்றும் தோலில், சுருக்கம் விழுமேயன்றோ? கொள்ளை வனப்பாம் கண்ணும், நொள்ளையாகி விடுமன்றோ? மஞ்சு போலுங் கருங்கூந்தல், பஞ்சாக வெளுப்பதும் உண்டேயன்றோ? பொற் கண்ணாடி போன்ற கன்னங்கள், பின்னால் ஒட்டிப்போகுமே யன்றோ? நிமிர்ந்த உடல், கூனிப்போய் வளைந்த வில்லாகி விடுமேயன்றோ? அன்னமென நடக்கும் நடையும், பின்னாளில் இருந்த இருப்பில் இருக்க ஆகிவிடுமன்றோ?

6. நிரய (நரக) நிலைமை: (83-92)

சு

குதம்பாய், சினம், பொறாமை, கொடுஞ்சொல், கோளுரை என்பவை பாவத்துக்கு மூலமானவை; கள்ளம் காமம் கொலை வஞ்சம் என்பவை நிரயப்பள்ளத்துள் வீழ்த்துபவை; தீராப் பொருளாசை பேராஇருளாம் நரகத்துச் சேர்க்கும்; நன்மகளிரை மனங்கலங்கச் செய்தல் கொடும்பாவம்; நற்குணத்தோரை இகழ்வதும், தூயமுதல்வனை வழிபடாதிருப்பதும் நிரயத்திற் சேர்ப்பன; முறைகேடாம் வகையில் இறை வழிபாடு செய்வார்க்கு மாபூதியாம் ஏழாம் நிரயம் எய்தும்.

7. பொய்த்தவ வொழுக்கத்தைப் பழித்தல் : (93-101)

குதம்பாய், தூய துறவாடை பூண்டு இரந்து தெருவில் திரிவார்க்கு நல்வழியில்லை; துறவுக்கு அடையாளமாம் கோலைக் கையில் கொண்டு வஞ்சம் செய்பவர்க்குப் பொருள் நூல் கல்வி என்ன பயனாம்? வெண்ணீற்றைப் பூசிக்கொண்டு இறைவன் திருவீதியில் நடப்பவர்க்குப் பெண்ணாசை எதற்காகவோ? ஒப்பற்ற இறைவனை உள்பொருளாய்க் கொண்டவர்க்குக்