உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குதம்பைச் சித்தர்

127

கையில் கப்பரை எதற்காகவோ? சான்றோர் என்று சொல்லிக் கொண்டு, மெய்ப்பொருள் அறிந்தவர்க்கு மான்தோல் எதற்காகவோ?இறைவன்பால் நாடிய மனத்தவர்க்குத் தாடியும் சடையும் எதற்காகவோ? நாதற்கு உறவாகி நல்ல தவநெறியில் தலைப்பட்டவர்க்குப், பாதக் குறடும் எதற்காகவோ? தவநிலை கண்டு தலைவன்வழி நடப்பார்க்கு மணிமாலை எதற்காகவோ? பிறபூதங்களொடு கூடுவதும் கூடாததும் ஆகிய வெட்ட வெளியைக் கண்டவர்க்கு அரைக்கச்சை எதற்காகவோ?

8. நிலையாப் பொருள் : (102-110)

குதம்பாய், முயன்று தேடிய பொருள் முடிவில் கூடவருமோ? உலகமெல்லாம் உன்கைவயம் இருந்தாலும் ஒரு தூசியளவாவது உன்னோடு வருமோ? உற்றாரும் உறவினரும், பெற்றாரும் பிறந்தாரும் ஊராரும் நீ போம் போது துணைக்கு வருவாரோ? இறைபணியாம் மெய்ப்பணியைக் கொள்ளாதவர்க்குப் பிற பொய்ப்பணிகள் எதற்காகவோ? விண்ணின் மேல் ஆசை கொள்ளாதவர்க்கு மண்ணின் மேல் ஆசை எதற்காகவோ? யானை - குதிரை - தேர் -காலாள் என்னும் நாற்படைதாமும் நிலையானவையோ? செங்கோல் வேந்தன் செல்வமே எனினும் தங்குவதுண்டோ? கூடமும் மாடமும்-கோபுரமும் - பெருநகரும் கூடவே வருமோ?

9. உடன் வருவன : (111-113)

குதம்பாய், நல்வினையும் தீவினையும் செய்தவரைத் தொடர்ந்து வருதல் உறுதியாம்; செய்யும் தவமும், செய்யும் தீமையும், செய்யும் நன்மையும் உடன்வருவனவாம்; இறைவனை வழிப்பட்ட வழிபாடும் உடன் வருமாம்.

10. ஆசையை ஒழித்தல் : (114-119)

குதம்பாய், ஆசையே பிறவிக்கு வித்து என்று முன்னோர் சொல்லியது உறுதிமொழியேயாம்; ஆசையை அறுத்தலே அரிய துறவாகும்; ஆசை அறுத்தவர்க்கு அளவிலா இன்பமா கும்; ஆசையை அறவே தொலைத்தவரே பெரும் பேற்றாளர்; இன்பங்களில் இச்சை வைப்பார்க்கே இடையறாத் துன்பமாம்; ஆசையை அறவே துறந்தார்க்கே பிறவிகள் இல்லையாம். 11. தவநிலை கூறல் : (120-130)

குதம்பாய், கொல்லாவிரதம் போற்றுதலும் நடுக்கும் பசியைக் களைதலும் நல்ல நோன்பாம்; தவநிலை சாராதவர்