உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குதம்பைச் சித்தர்

14. சமயநிலை கூறல் (146-154)

129

குதம்பாய், தன்னறிவே தெய்வமென்னும் உலகியற் கொள்கையாளர் அறிவு, புல்லறிவேயாம்; கல்லையும் செம் பையும் கட்டையையும் வணங்குதல் புல்லறிவேயாம்; உலகத்தை யும் அதன் இயக்கத்தையும் கண்ணாரக்கண்டும் இறைவன் இல்லை என்பவர் கருத்து இழிந்ததேயாம்; பெண்ணின்பம் பெறுதலே வீடுபெறு என்னும் பாடாண்டியர் அறிவுக்கண் தூர்ந்து போனவரே; செங்கதிரே தெய்வமாகச் சொல்லும் கதிரவச் சமயம் பொருளற்றது; மனமே தெய்வம் என்று கொண்டாடும் கூட்டம் இழிந்த கூட்டமேயாம்; பற்பல சமயங் களைக் கூறும் மறைகள் கற்பனையால் ஆக்கப்பட்டவையே ; நிமிர்ந்த குரங்கையும், பெரும்பருந்தையும் வேண்டிக் கொள்வ தால் பயனேதும் உண்டாமோ? மெய்யான இறைவன் ஒருவனே என்று கொள்ளாத பற்பல மதங்களும் பொய்யான தேவனையே வணங்குவனவாம்.

15. மந்திரநிலை கூறல் : (155-157)

குதம்பாய், மந்திர எழுத்துகளை நாற்பத்து மூன்று காணத்துள் அடக்கி அதன்மேல் கண்டறிவாயாக. அறு கோணத்துள்ளே ஆறெழுத்து மந்திரத்தை (சரவணபவ) அமைத்து அதனுள்ளின் உள்ளே அறிவாயாக; ஐந்து அறைக்குள் ஐந்தெழுத்து மந்திரத்தை (சிவாயநம) அமைத்து அவ்வண்ணமே உள்ளத் துள்ளேயும் அதனைக் கண்டு அறிவாயாக.

16. வளி(வாத)நிலை கூறல் : (158-163)

குதம்பாய், ஆறு ஆறும் நூறும் ஆகிய 136 கார வகைகளும் சேர வலிமிக்க 'முப்பூ' ஆகும்; விந்தும் நாதமும் (ஓசையும் ஒலியும்) விளங்கி அசைந்த பின்வந்தது வளிநிலையாம். நீரைக் கொண்டு உப்பினை நிலைப்படுத்தினால் அது முப்பூ வாகும்; உள்ளக் கருவியால் அறிவதே உண்மை வளிநிலையாம்; பிற வகையால் கொள்ள இயலாதாம்; பிறப்பாலே வளிநிலை ஆவதன்றிப் பின்னை வாழ்வாலே வருவதில்லையாம்; ஐந்து பூதங்களும் விந்து நாதம் என்பனவும் தனித்தனி நீங்கி ஒன்று பட்டுவிட்டால் உலகம் அழிந்துபோகும்;

17. மருத்துவம் கூறல் : (164-169)

குதம்பாய், முப்பிணி எனப்படும் மும்மலங்களையும் அறியாதவர் எப்பிணியும் அறியாதவரே; துய்ப்புவகை (போக)க் கட்டுடையவனின் சுடர் நெருப்பிலே நோய்கள் எவையேனும்