உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குதம்பைச் சித்தர்

139

உயிரோடு இருக்கும் போது பெற்றோரைப் பேணாத சிலர், அவர்கள் இறந்தபோது கொட்டு குரவை பாடை பல்லக்கு வேட்டு வேடிக்கை என்று பகட்டாகப் பணம் செலவிடுதல் உண்டு. அத்தகையர் சிறுசெயலை நயமாக விளம்புபவர்போல், "செத்தபின்னே சாப்பறை கொட்டினால் செத்தவர் கேட்பாரோ? என்கிறார் (193).

விலங்குகளையும் பறவைகளையுமே ஒரு காலத்தில் 'சாதி' என்னும் சொல் குறித்தமை தொல்காப்பியத்தால் விளங்கும். பின்னே சாதிச்சொல் மக்களுக்கு வந்ததுமன்றி, சொல் லொணாக் கேடுகளைப் பல்வகைகளிலும் செய்வதாயிற்று. ன்றும் அதன் கொடுமை முற்றாக ஓய்ந்த பாடில்லை. சித்தர் சமயமோ சாதியற்ற சமயம்! சமயம் எனச் சொல்லப்படும் பவப்பல சமயங்களையும் கடந்த இயற்கைச் சமயம்!

'ஆண்சாதி' என ஒன்று; 'பெண் சாதி' என ஒன்று; இவ்விரு சாதியை யன்றி மற்றவை வீண்சாதி என்கிறார். ஆண்பால் பெண்பால் என்பவற்றை ஆண்சாதி பெண்சாதி என இருவேறு சாதியாகப் பகுத்ததே பெண்ணடிமைக்கும், பெண்ணை விலைப் பண்டம் போலக் கருதுதற்கும் வாய்ப்புத் தந்துவிட்டது என்றால், வீண்சாதிகளின் பேயாட்டத்தைச் சொல்லவேண்டுமா? பழனி மலைப் படிக்கட்டுப் போலல்லவோ சாதிப்படிகள் அமைந்து விட்டன! ஒன்றின் தலையில் ஒன்று ஏறிக்கொண்டு பேயாட்டம் போடுகின்றன!

-

சித்தர் சொல்கிறார்:

“பார்ப்பார்கள் மேலென்றும் பறையர்கள் கீழென்றும் தீர்ப்பாகச் சொல்வதென்ன?”

தீர்ப்பாக - முடிவாக!

“பார்ப்பாரைக் கர்த்தர் பறையரைப் போலவே

தீர்ப்பாய்ப் படைத்தார்"

(138)

-

-

தீர்ப்பாய் முழுமையாய்.

(139)

இவ்வாறு சுட்டிய சித்தர், சாதிகளின் படைப்பு 'கற்பனை' என்றும், சாதிப்பேர் 'கட்டுச்சொல்' என்றும், 'நீதிமானே என்றும்,சாதிப்பேர் சாதிமான்' என்றும் (140, 141, 144) மேலும் தெளிவிக்கிறார்.

ஊனுடம்பு ஆலயம்' என்று கண்ட மண்ணிலேதான் உடலைப் பழித்துக் கூறுதலையும் ஒரு நோன்பு போலக்