உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140

இளங்குமரனார் தமிழ்வளம் -37

கொண்டவரும் பிறந்தனர். நிலையாமையைச் சுட்டிக்காட்டி நிலைக்கத்தக்க பணி செய்விக்கக் கருதிய மெய்யுணர்வாளர் களின் கொள்கையைப் பொய்யுணர்வு பற்றிக்கொண்டோர் வளமாகப் பழித்தனர். பழித்துக் கூறுவதே பண்பாடு என்றும் கொண்டுவிட்டனர். "பெண்ணிற் பெருந்தக்கது யாது" என்று வினாவினை அறத்துப்பாலிலே எழுப்பி, இன்பத்துப் பாலிலே, "பெண்ணிற் பெருந்தக்கது இல்" என்று விடையிறுத்த வள்ளுவர் வழியை எண்ணாதார்-தம்மைப் பெற்றவரும், தம்மை மணந்த வரும், தமக்குத் துணையாய்ப் பிறந்தவரும், தம் மக்களாய்ப் பிறந்தவரும் பெண்டிரே அன்பின் வைப்பகம்; அருளின் இருப்பகம் பென்மையே என்பவற்றை எள்முனையளவும் எண்ணாராய் மகளிரைப் பழிப்பதே மாப்பெரும் தொண்டாகக் கொண்டு வாய்கிழியப் பழித்துப் போயினர். இவ்வகையில் சித்தர்களும் விதிவிலக்குப் பெற்றார்கள் இல்லைபோலும்!

-

-

“நாற்றமிக்க உடலுக்கு நறுமணம் எதற்கோ? மலஞ்சோரும் உடலுக்கு மணம் எதற்கோ?

நீச்சுக் கவிச்சு நீங்கா உடலுக்குப் பூச்சு எதற்கோ? பீவாச முள்ள உடலுக்குப் பூவாசம் எதற்கோ?

போராட்டம் செய்து புழுத்த உடலுக்கு நீராட்டம் எதற்கோ? கோவணத்தோடேகொளுத்தும் உடலுக்குப் பூவணை எதற்கோ?”

எப்படி வினாக்கள்?

இவ் வினாக்களின் பயன் என்ன? ஒன்றே ஒன்று! "மேலை மினுக்குதலே மேன்மை எனக்கருதாதே! மேலான நல்வினை களிலே ஈடுபடு" என்பதாம்! இன்னும் சொல்லலாம். “புறத்தழகே போற்றி ஒழியாதே; அகத்தழகு தேடு" என்பதாம்.

மலைபோல் மார்பு நடுவாக வந்ததாம்; கண்ணில் இடும் மை கையால் அழைப்பது போல்வதாம்; முல்லைப்பல் சுடு காட்டில் உதிர்ந்து கிடக்குமாம். கிளிமொழி குழறிவிடுமாம்; தோல் சுருக்கமாகுமாம்; கொள்ளைக்கண் நொள்ளையாகுமாம்; மஞ்சுக் கூந்தல் பஞ்சாகும்; மேனி வில்லாய் வளையுமாம்- இவை மாதரைப் பழித்து மகிழ்வு கொண்ட செய்திகள். "சாதி வேற்றுமை இல்லை; சமயவேற்றுமை இல்லை; உயிர்த்தொண்டே உயர் தொண்டு; புறக்கோலத்தினும் அகக்கோலமே போற்றத்தக்கது' என்னும் கடைப்பிடி உடையவரும் மாதரைப் பழித்துக் கூறுகிறார் என்றால் 'போலித்துறவு' அவரையும் ஆட்டிவைக்கிறது என்பது தானே பொருள்?