உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குதம்பைச் சித்தர்

'ஆனந்தம் பொங்கி அறிவோடிருப்போர்' 'சித்திரக் கூத்தைத் தினந்தினங் காண்போர்' 'முக்கோணந் தன்னில் முளைத்தெழுந்த ஞானி' ‘அட்டதிக் கெல்லால் அசைந்தாடும் நாதர்’ 'முத்திபெற் றுள்ள முயங் குமெய்ஞ் ஞானி' 'அல்லலை நீக்கி அறிவோ டிருப்போர்' "அட்டாங்க யோகம் அறிந்த மெய்ஞ்ஞானி' 'வேக மடக்கி விளங்குமெய்ஞ் ஞானி' 'மாத்தானை வென்று மலைபோல் இருப்பார்' ‘செத்தாரைப் போலே திரியுமெய்ஞ் ஞானி' 'கண்டாரை நோக்கிக் கருத்தோ டிருப்போர்' காலனை வென்று கருத்தறிவாளர்' 'வெண்காயமுண்டு மிளகுண்டு சுக்குண்டோர்' 'மாங்காய்ப் பாலுண்டு மலைமேல் இருப்போர்' ‘பட்டணஞ் சுற்றிப் பகலே திரிவார்’ ‘தன்னை யறிந்து தலைவனைச் சேர்ந்தவர்’ ‘பத்தாவும் தானும் பதியோ டிருப்பார்'

143

என்னும் முப்பத்தொரு பாடல்களில் சொல்லப்பட்டுள்ளனர். ஒரே ஒரு பாடலில் மட்டும், பின்னடிச் செய்தி ஒத்தும் முன்னடிச் செய்தி ஒவ்வாதும் வேறுபட்டிருப்பதால் அப்பாடலில், மெய்யுணர்வாளர் தன்மை சொல்லப்படவில்லை. அப்பாடல்,

“தாவாரம் இல்லை தனக்கொரு வீடில்லை தேவாரம் ஏதுக்கடி - குதம்பாய்

தேவாரம் ஏதுக்கடி

6T GOTLI (244).

99

தாவாரமும் வீடும் இல்லாதவனுக்குத் தேவாரம் வேண்டுவ தில்லை என்பது போல் இப்பாடல் வெளிப்படத் தோன்றுகின்றது. ஆனால், இதன் உட்பொருள் வேறு.

,

'தா' என்பதற்குத் துன்பம் என்பதும், 'வாரம்' என்பதற்குப் பங்கு என்பதும் 'வீடு' என்பதற்கு விடுதலை என்பதும் பொருள்.