உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144

இளங்குமரனார் தமிழ்வளம் -37

இவற்றைக் கொண்டு இப்பாடற் பொருளைப் பார்த்தால் உண்மை விளங்கும்.

பிற உயிர்கள் படுகின்ற துன்பத்தில் தனக்கென ஒரு பங்கு இல்லை; ஆனால், எல்லாம் 'தனக்குத்' 'தனக்கு' என்ற பேராசை யில் இருந்தும் விடுதலையும் இல்லை; இத்தகையவனுக்குத் தெய்வத்திருவருளால் பாடப்பெற்ற தேவாரத்தைச் சொல்லிக் கொண்டிருத்தல் மட்டும் என்ன பயனைச் செய்யும். செக்கு இரைச்சலென, தவளை இரைச்சலெனத் தெய்வப் பாடல்களைப் பாடுவதால் என்னபயன் எய்தும்? பிற உயிர்களுக்கு வந்து துன்பத்தைத் தன் துன்பமாகக் கொண்டு வடிக்கும் அருட் கண்ணீரே இறைவனுக்கு நீராட்டு; தனக்கெனப் பற்றுஇன்றிப் பிறர்க்கு உதவுதலே இறைவனுக்குச் செய்யும் வழிபாடு. இவற்றைக் கடைப்பிடிப்பதே 'சலம்பூவொடு ' சார்த்திப்பண்ணோடு இசைத்து வாரம் பாடுதல், இல்லாக்கால் தேவாரப்பாட்டு திருப்பாட்டு அன்று! தெருப்பாட்டுப் பயனும் இல்லதாகப் போய்விடும் என்பதாம்.

தேவாரம் வேண்டும்; அத்தேவாரம் உயிர்களுக்கு இரங்கி உதவுவதாம். தாவாரத்தின் வழியும் தனக்கெனப் பற்றறுத்த பான்மை வழியும் விளங்கவேண்டும் என்பது இப்பாடற் கருவாம். இக் கருத்தோடு ஒட்டியதே,

66

'கண்டாரை நோக்கிக் கருத்தோ டிருப்பவர்க்குக் கொண்டாட்ட மேதுக்கடி - குதம்பாய் கொண்டாட்ட மேதுக்கடி'

என்பது,

இதில் ‘கண்டாரை நோக்கி' என்பது வெளிப்படப் பார்ப்பின் கண்டவர்களைப் பார்த்து என்றும் கண்ட கண்ட காரிகையரைப் பார்த்து என்றும் பொருள் வரும். ஆனால், அதன் நுண்பொருள், கண் + தாரை + நோக்கி' கண்ணினின்று வழியும் அவலக் கண்ணீரை உருக்கத்தோடு பார்த்து என்பதாம்."அன்பிற்கும் உண்டோ அடைக்குந் தாழ் ஆர்வலர், புன்கணீர் பூசல் தரும் என்பதும், "கண்ணிற் கணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேற், புண்ணென் றுணரப் படும்" என்பதும் எண்ணத்தக்கவை.

பிறர் வடிக்கும் கண்ணீரைத் தன் கனிவான உதவியால் துடைப்பதே றைவனுக்கு நிகழ்த்தும் சிறப்பொடு பூசனை. இவ்வருட்பெருக்காம் கொண்டாட்டத்தையே இறைவன்