உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குதம்பைச் சித்தர்

145

வேண்டிக்கிடக்கிறான். அதனை விடுத்துக் கண்டவர்களை வஞ்சகத்தோடு பார்த்துத் தன்னறிவிழந்த செயல்களைச் செய்தலில் ஈடுபடுவான் இறைவனுக்காகக் கொண்டாடுவது எதற்காக? அக்கொண்டாட்டம்

றைவனுக்கு

தருவதாகுமோ? ஒரு போதும் ஆகாது என்பதாம்.

உவகை

“பட்டணம் சுற்றிப் பகலே திரிவார்க்கு

முட்டாக் கேதுக்கடி - குதம்பாய்

முட்டாக் கேதுக்கடி

J5

என்பதும் மெய்ப்பொருள் மிக்கதாம்.

பட்டணம் சுற்றல், பகலில் என்ன இரவிலும் திரிதல், இன்னும் பட்டணம் என்ன, நாடு கடந்து நாடு சுற்றித்திரிதல் என்பனவெல்லாம் நாளும் நாளும் காணும் செய்திகளை இவ்வாறு திரிவார் முட்டாக்குப்போட்டால் என்ன? போடா விட்டால் என்ன? முட்டாக்குப்போடல் வழக்கமாகவும், சமயச் சடங்காகவும் கூட இல்லையா? இவற்றைக் கருதியா குதம்பையார் பாடினார்?

பட்டணம் என்பது பட்டு + அணம் எனப் பிரியும். பட்டு என்பது துணி; அணம் இறுக்கிக் கட்டுவதாம் கோவணம்; 'குறியிறை’என்பதும் அது! அதனைக் கட்டிக்கொண்டு மற்றும் ஆடையணிப் பற்றற்றுத் திரிய வேண்டிய துறவோர் அடிமுதல் முடிகாறும் முட்டாக்குப் போட்டுக்கொண்டு திரிவது எதற்காக? அவர்களுக்கு மூடுமறைவான வாழ்வு எதற்காக? என்பதாம். முட்டாக்காலும் முட்டும் முட்டுப்பாட்டை முழுத்துறவோர் கொள்ளார் என்பது குதம்பையார் கருத்தாம்.

"அட்டாங்க யோகம்' என்பதைக் குறிக்கிறார் குதம்பையார். அது எண்வகைத் தவநிலையாம். 'அட்டாங்க யோகக் குறள்' என்பது ஔவையார் இயற்றியதொரு நூல். அட்டாங்கம் என்பவை இயமம், நியமம், ஆதனம், பிராணாயாமம், பிரத்தியா காரம், தாரணை, தியானம், சமாதி என்பனவாம். இவற்றை முறையே சால்பு, கடைப்பிடி, இருக்கை, மூச்சியம், உண்ணோக்கு, நினைநிலை, உள்குதல், தன்னையறிதல் எனத் தமிழில் கூறலாம்.

“அட்டாங்க யோகம் அறிந்தமெய்ஞ் ஞானிக்கு முட்டாங்கம் ஏதுக்கு”

என வினாவுகிறார் குதம்பையார். முட்டாங்கம் என்பது முட்டுப்பாடான வேதாங்கமாம். அட்டாங்கம் அறிந்தவனுக்கு