உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குதம்பைச் சித்தர்

147

காணாமற்கண்டு (217). நித்திலைகெட்டு நினைவோடு இருத்தல் (220), வேவாமல் வெந்து வெளியொளி கண்டோர் (226), சாகாமல் தாண்டித் தனிவழி போவோர் (227) என்பவற்றில் இச்சொல்லாட்டைக் காண்க.

இறைமையில் ஒன்றிய அடியார் இறைவனைத் தலைவனா கவும், தம்மைத் தலைவியாகவும் கொண்டு அகத்துறைப் பாடல்கள் இயற்றல் பண்டுதொட்டே வரும் வழக்கு. இது தமிழில் கிழத்தி முறையாம். வடமொழியாளர் 'நாயகிபாவம்' என்பர். அந் நிலையில் இறையைத் தலைக்கூடியவர் குதம்பையார்!

“பத்தாவும் தானும் பதியோடிருப்பார்”

என்று கூறிய அவர் வாக்கு அதற்குச் சான்று. அவரைத் "தன்னை மறந்தாள் தன்நாமம் கெட்டாள் தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே" என்னும் அப்பரடிகள் திருவாக்கோடு ஒப்பிட்டு உவகை கூரலாம்.'