உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குதம்பைச் சித்தர்

பற்றற்ற வத்துவைப் பற்றறக் கண்டோர்க்குக்

குற்றங்கள் இல்லையடி

குற்றங்கள் இல்லையடி.

காட்சி யகாட்சி கடந்த பிரமத்தைச்

சூட்சியாய்ப் பார்ப்பாயடி

149

குதம்பாய்

5

சூட்சியாய்ப் பார்ப்பாயடி.

வெட்டவெளிக்குள் வெறும்பாழாய் நின்றதை

இட்டமாய்ப் பார்ப்பாயடி

குதம்பாய்

6

குதம்பாய்

இட்டமாய்ப் பார்ப்பாயடி.

7

எங்கு நிறைந்தே இருக்கின்ற சோதியை

அங்கத்துள் பார்ப்பாயடி

அங்கத்துள் பார்ப்பாயடி,

அண்டத்துக் கப்பால் அகன்ற சுடரினைப்

பிண்டத்துள் பார்ப்பாயடி

பிண்டத்துள் பார்ப்பாயடி.

ஆவித் துணையாகும் ஆரா அமுதத்தைச்

குதம்பை

8

குதம்பாய்

9

சேவித்துக் கொள்வாயடி

சேவித்துக் கொள்வாயடி.

தீண்டா விளக்கினைத் தெய்வக் கொழுந்தினை

மாண்டாலும் போற்றிடுவாய்

மாண்டாலும் போற்றிடுவாய்.

அண்டமும் பிண்டமும் ஆக்கிய தேவனைத்

தெண்டனிட் டேத்தடி

தெண்டனிட் டேத்தடி.

எந்தை பராபர வத்தின் இணையடி

குதம்பாய்

10

குதம்பாய்

11

குதம்பாய்

12

சிந்தையிற் கொள்வாயடி

சிந்தையிற் கொள்வாயடி.

விண்ணொளி யாகி விளங்கும் பிரமமே

கண்ணொளி யாகுமடி

கண்ணொளி யாகுமடி.

குதம்பாய்

13

குதம்பாய்

14