உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குதம்பைச் சித்தர்

காலனை வென்று கருத்தறி வாளர்க்குக்

கோலங்கள் ஏதுக்கடி

கோலங்கள் ஏதுக்கடி.

வெண்காய முண்டு மிளகுண்டு சுக்குண்டோர்க்

குண்காயம் ஏதுக்கடி

உண்காயம் ஏதுக்கடி.

மாங்காய்ப்பா லுண்டு மலைமே லிருப்பார்க்குத்

தேங்காய்ப்பா லேதுக்கடி

173

குதம்பாய்

240

குதம்பாய்

241

தேங்காய்ப்பா லேதுக்கடி.

குதம்பாய்

242

பட்டணஞ் சுற்றிப் பகலே திரிவார்க்கு

முட்டாக் கேதுக்கடி

குதம்பாய்

முட்டாக் கேதுக்கடி.

தாவார மில்லை தனக்கொரு வீடில்லை

243

தேவாரம் ஏதுக்கடி

தேவாரம் ஏதுக்கடி.

தன்னை யறிந்து தலைவனைச் சேர்ந்தோர்க்குப்

பின்னாசை ஏதுக்கடி

பின்னாசை ஏதுக்கடி.

பத்தாவுந் தானும் பதியோ டிருப்பாருக்கு

உத்தாரம் ஏதுக்கடி

உத்தாரம் ஏதுக்கடி.

குதம்பைச் சித்தர் பாடல் முற்றிற்று.

குதம்பாய்

244

குதம்பாய்

245

குதம்பாய்

246