உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172

இளங்குமரனார் தமிழ்வளம் - 37

சித்திரக் கூத்தைத் தினந்தினங் காண்போர்க்கு

பத்திரம் ஏதுக்கடி

பத்திரம் ஏதுக்கடி

முக்கோணம் தன்னில் முளைத்தமெய்ஞ் ஞானிக்குச்

சட்கோணம் ஏதுக்கடி

சட்கோணம் ஏதுக்கடி.

அட்டதிக் கெல்லாம் அசைந்தாடும் நாதர்க்கு

நட்டணை ஏதுக்கடி

நட்டணை ஏதுக்கடி.

முத்திப்பெற் றுள்ள முயங்குமெய்ஞ் ஞானிக்குப்

பத்தியம் ஏதுக்கடி

பத்தியம் ஏதுக்கடி.

அல்லலை நீக்கி அறிவோ டிருப்பார்க்குப்

பல்லாக் கேதுக்கடி

பல்லாக் கேதுக்கடி.

அட்டாங்க யோக மறிந்தமெய்ஞ் ஞானிக்கு

முட்டாங்கம் ஏதுக்கடி

முட்டாங்கம் ஏதுக்கடி.

வேக மடக்கி விளங்குமெய் ஞானிக்கே

யோகந்தான் ஏதுக்கடி

யோகந்தான் ஏதுக்கடி.

மாத்தானை வென்று மலைமே லிருப்பார்க்குப்

பூத்தானம் ஏதுக்கடி

பூத்தானம் ஏதுக்கடி.

செத்தாரைப் போலே திரியுமெய்ஞ் ஞானிக்குக்

கைத்தாளம் ஏதுக்கடி

கைத்தாளம் ஏதுக்கடி.

கண்டாரை நோக்கிக் கருத்தோ டிருப்பார்க்குக்

கொண்டாட்டம் ஏதுக்கடி

கொண்டாட்டம் ஏதுக்கடி.

குதம்பாய்

230

குதம்பாய்

231

குதம்பாய்

232

குதம்பாய்

233

குதம்பாய்

234

குதம்பாய்

235

குதம்பாய்

236

குதம்பாய்

237

குதம்பாய்

238

குதம்பாய்

239