உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குதம்பைச் சித்தர்

நித்திரை கெட்டு நினைவோ டிருப்பார்க்கு

171

முத்திரை ஏதுக்கடி

முத்திரை ஏதுக்கடி.

தந்திர மான கலந்தனில் நிற்போர்க்கு

மந்திரம் ஏதுக்கடி

மந்திரம் ஏதுக்கடி.

சத்திய மான தவத்தில் இருப்போருக்

குத்தியம் ஏதுக்கடி

குத்தியம் ஏதுக்கடி.

நாட்டத்தைப் பற்றி நடுவணை சேர்வோர்க்கு

வாட்டங்கள் ஏதுக்கடி

வாட்டங்கள் ஏதுக்கடி.

முத்தமிழ் கற்று முயங்குமெய்ஞ் ஞானிக்குச்

சத்தங்கள் ஏதுக்கடி

சத்தங்கள் ஏதுக்கடி.

உச்சிக்கு மேற்சென் றுயர்வெளி கண்டோருக்கு

இச்சிப்பிங் கேதுக்கடி

இச்சிப்பிங் கேதுக்கடி.

வேகாமல் வெந்து வெளியொளி கண்டோர்க்கு

மோகந்தான் ஏதுக்கடி

மோகந்தான் ஏதுக்கடி.

குதம்பாய்

220

குதம்பாய்

221

குதம்பாய்

222

குதம்பாய்

223

குதம்பாய்

224

குதம்பாய்

225

குதம்பாய்

226

சாகாமல் தாண்டித் தனிவழி போவார்க்கே

ஏகாந்தம் ஏதுக்கடி

ஏகாந்தம் ஏதுக்கடி.

அந்தரம் தன்னில் அசைந்தாடும் முத்தர்க்குத்

தந்திரம் ஏதுக்கடி

தந்திரம் ஏதுக்கடி.

ஆனந்தம் பொங்கி அறிவோ டிருப்பார்க்கு

ஞானந்தான் ஏதுக்கடி

ஞானந்தான் ஏதுக்கடி.

குதம்பாய்

227

குதம்பாய்

228

குதம்பாய்

229