உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூல்

முதற் நூற்பா

உலகம் பெரியது; உலகத்திற்கு அண்டம் என்பது ஒரு பெயர்; அண்டம் ஒன்றா? இரண்டா? "நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன" என்பது மணிமொழி! "பன்னூறு கோடி அளவின அண்டம்" என்பது அறிவியல் ஆய்வு! இவ்வண்டங் களை யெல்லாம் சேர்த்து எப்படிக் குறிப்பது? 'பேரண்டம் என்பது பெருமக்கள் குறிப்பு!

அண்டத்தில் உள்ள பொருள்களை எல்லாம் அறிந்து முடித்தாகிவிட்டதா? அவற்றுக்கெல்லாம் பெயர் வைத்தாகி விட்டதா? இத்தனை என்று எண்ணிக்கை யிட்டாகி விட்டதா? இல்லை! இன்று மட்டுமில்லை, என்றுமே முழுதுற அறிந்ததாக மனித ஆற்றலுக்கு இடமில்லை! 'அறிதோறும் அறியாமை கண்டற்று" என்பது வள்ளுவம் !

"எத்தனைகோடி இன்பம் வைத்தாய் இறைவா இறைவா' என்று வியப்பது இயற்கை இறைமை! இத்தனை கோடி என்று இன்பச் சுரப்பையே எண்ண முடியவில்லையானால், இன்பச் சுரப்பின் மூலமாம் அண்டப் பொருள்களை எவரே எண்ணிக் கணக்கிடவல்லார்?

உலகப் பொருள்கள்தாம் எத்தனை எத்தனை வகை! பருப்பொருள் நுண்பொருள்; காட்சிப் பொருள் கருத்துப் பொருள்; நீர்ப் பொருள் ஆவிப் பொருள்; இயங்கு பொருள் நிலை பொருள்; கூட்டுப் பொருள் கலப்புப் பொருள்; அகப் பொருள் புறப் பொருள்; மூலப் பொருள் ஆக்கப் பொருள் - இப்படி இப்படிப் பொருள்களைப் பொருள்களைப் பகுத்துப் பகுத்துப் பகுத்து எண்ணினாலும் அவ்வத் துறை வல்லாராலும் எண்ணிமுடிக்க முடிவதோ?'யாவரே முழுதுறக் கண்டார்?' என்று கைவிரிக்கவே நேரும். ஆனால் ஒருவர், "உலகத்துப் பொருள்களை யெல்லாம் சுருக்கமாக எண்ணிவிட வேண்டும்" அதுவும் சுருக்க மென்றால் சுருக்கம். மூன்றே சொற்களில் எண்ணிவிட வேண்டும்" என்று ஒரு புதிர் போட்டால், ஆழ அழுந்திய புலமையில்லார் 'நடக்கும்