உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞானபோதம்

185

ஒன்றா' என்று திகைப்புறுவர். ஆனால், அறிவறிந்த பெரு மக்களோ வழிவழி வந்த அறிவு மாட்சியால் செவ்விய மறுமொழி சொல்லிவிடுகின்றனர். அவர்கள், பொய்யறியாப் புலமை யாளராய்-மெய்கண்டாராய்-விளங்குதலால் சொல்ல முடிகின்றது. அவர்கள் சொல்லும் மூன்று சொற்கள் தாம் எவை?

CC

"அவன் அவள் அது"

முழுதுலகையும் குறிப்பதற்கு அவர்கள் சொல்லும் சொற்கள் 'அவன், அவள், அது' என்பனவேயாம்.

இம்முச் சொற்களால் சுட்ட முடியாத ஒரு பொருள் உண்டோ? உண்டோ? உலகில் எந்த மொழியில் இந்த முச்சுட்டுகள் இல்லை! எந்த இடத்தில் எந்தக் காலத்தில் இந்த முச்சுட்டுகள் இல்லை! மெய்ப்பொருள். காலம் இடம் மொழி இனம் எல்லாம் எல்லாம் கடந்த பொதுப்பொருள்! இறைமையும் இயற்கையும் எப்படிப் பொதுப் பொருள்களோ அப்படியே, மெய்ப்பொருள் மெய்யுணர்வு என்பனவும் பொதுப் பொருள்களே!

உலகம், 'அவன், அவள், அது' என்னும் முப்பொருள் களையுடையது எனின், 'அவர்' என்றும் 'அவை' என்றும் ந்து ஐந்தாக்கிச் சொல்வாரே தொல்லாசிரியர்? மெய் கண்டார் மூன்றாக்கிக் கொண்டதென்ன?

'அவன்' பலர், 'அவள்' பலர் - 'அவர்' அல்லரோ? 'அது' பல 'அவை' யல்லவோ? ஐந்தை மூன்றாக்கிக்கொண்ட அருமை விளங்குகின்றதே அன்றி, குன்றக் கூறிய குறைபாடு இல்லையாம்!

'அவன் அவள் அது' என்பவை படர்க்கைகள்! தன்மை முன்னிலைப் பெயர்களைச் சுட்டினால் என்னை?

-

சுட்டினால் குற்றமாம்! படர்க்கையாகிய அவனை, அவளை, அதை அடைய விரும்புபவன், தன்மை முன்னிலையை விடாமல் முடியுமா? ஒருகிளையை விடாமல் மறுகிளையைப் பற்றுவது எப்படி?

"யான் எனது என்னும் செருக்கு அறுப்பான், வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும்" என்பது மறைமொழி. "முகத்திற்கு முகம் புகழ்தல், நட்பிற்கும் கூடாது" என்பதும் மறைமொழி! அகப் பொருளைக் கூட, தன்மை முன்னிலை விலக்கிப் படர்க்கையால் சுட்டல் பழந்தமிழ் வழக்கு எனின், அகப்பொருளில் அகப் பொருளாம் மெய்ப் பொருளைச் சுட்டுவார் தன்னை முன்னிலை கருதுவரோ?