உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186

இளங்குமரனார் தமிழ்வளம் 37

'அவனன்றி அணுவும் அசையாது!' என்பதை அறியார் எவர்? 'அவன் துணை' 'அவன் அருள்' 'ஒருவன் துணை', 'ஒருவன் பார்த்துக் கொண்டிருக்கிறான்' என்பவற்றில் வரும் அவனும் ஒருவனும் படர்க்கையே அல்லவோ? இன்னும் ஒன்று: நான், நீ என்பன போலும் தன்மை முன்னிலைச் சொற்களில் பால்வேறுபாடு காணக்கூடுவது இல்லையே!

அவனுக்காக அவள்; அவளுக்காக அவன்; ஆதலால் 'அவன் அவள்' எனப் பெற்றனர். அவர்களுக்காக எது எனின் 'அது' ஆதலால், 'அவன் அவள் அது' என்று கூறல் முறையா யிற்றாம்!

அவனை முற்படக் கூறுவானேன்? அவளை முற்படக் கூறக்கூடாதா? கூறலாம்; இடப்பக்கம் இருந்து வந்தால் என்ன? வலப்பக்கம் இருந்து வந்தால் என்ன? ஒன்றே! ஆனால், வலம் சுற்றலும், ஊர்வலம் நகர்வலம் வருதலும் வழக்காயிற்றே! அத்தகைய ஒரு வழக்கே, அவனை முற்படக் கூறிற்று! ஏற்றத் தாழ்வு காட்டுவது இல்லது தமிழ் வழக்கு! தலைவன் தலைவி, கிழவன் கிழத்தி, நம்பி நங்கை என்பவற்றைக் கருதுக. அம்மை அப்பன், தந்தை தாய் என்பவற்றையும், 'அன்னையும் பிதா'வும் 'மாதா பிதா' என்பவற்றையும் எண்ணினால் முன்பின் கூறல் பெருமை சிறுமை இல்லை எனத் தெளிவாக்கும்.

'சிறந்ததை முற்படக் கூறல்' என்பது ஓர் இலக்கண நெறியென்றால், சிறந்ததைப் பிற்படக் கூறல் என்பதும் ஓர் இலக்கண நெறியேயாம்.

மனையறம் பேணற்கு முன்னது மணம்; மணத்தை ஊரறியக் காட்டுவதற்கு, மணச் சடங்கு; மணச் சடங்கிற்கு முதற்கண் வருபவன் 'அவன்'; பின்னே வருபவள் அவள்; பின்னே 'அது' நிகழும். உலகெல்லாம் ஆய்ந்தாலும் இந்நாள் வரை இதற்கு மாறாக நடைபெறும் காட்சி இல்லையே! ஏன்?

அவன், ஆடவன்; அவள் பெண்ணின் நல்லாள்; அவன் வன்மை மிக்கோன்; அவன் மென்மைப் பெட்டகம்; இயற்கை அவனுக்கு அருளிய 'வலம்' அது; இயற்கை அவளுக்கு அருளிய 'நலம்' அது! அவ்வலமும் நலமும் உலகை உய்ப்பன! இதில் ஏற்ற தாய்மையை அணுவளவேனும் தாழ்த்த நினைப்பனாயின், அவன் தாய் பெற்ற மைந்தன் அல்லன்! அவன், அவள், அது