உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞானபோதம்

189

தோற்றம், திதி, ஒடுக்கம் என்பது அவர் ஆட்சி. திதியாவது உளதாதல்; காத்தல் என்பதும் அது. ஒடுக்கம் ஆவது அழித்தல்.

மிகக் கருத்தோடும் கவனத்தோடும் சொற்களை ஆள்கிறார் மெய்கண்டார். சின்னஞ் சிறிய சொற்களையே தேர்ந்தெடுத்துக் கொண்டு பென்னம் பெரிய பொருளைப் புகுத்துகிறார். திருவள்ளுவர் ஆட்சியில் திளைத்துத் திளைத்து, திருமூலர் முதலியோர் ஆட்சியில் அழுந்தி அழுந்தி, தமிழ் இலக்கண மூலவேரில் தோய்ந்து தோய்ந்து, 'தாமே போதமாக' நின்று அருள்கின்றார். ஆகலின், அவர்தம் சொல்லின் மாட்சிக்கு எல்லையொன்று இல்லையாம்!

தோன்றிய என்னாமல் 'தோற்றிய' என்று பிறவினை வாய்பாட்டால் அருளியது ஏன்? கூட்டம், தானே கூடாமை போலவும்,பிறரொருவர் கூட்டக் கூடியது போலவும், இவ் வுலகமும் தானே தோன்றியதாகாமல் பிறர் ஒருவரால் தோற்று விக்கப்பட்டது என்பதை உணர்த்தவே 'தோற்றிய' என்றார். தோன்றுதல் தோற்றுதல் என்பவற்றில் ஒரோ ஓரெழுத்து மாற்றமே நேர்ந்துளது. எனினும் அதன் வினைப்பாட்டில் எத்தகைய வேறுபாடு? வேறுபாடு? 'கழுவேறியது' கழுவேறியது' என்பது பழைய திருவிளையாடல். 'கழுவேற்றியது' என்பது பரஞ்சோதியார் திருவிளையாடல். எழுத்து மாற்றத் திருவிளையாடல், எத்தகைய கொடுமாற்றத்திற்கு இடனாகிவிட்டது?

இறைவனால் தோற்றுவிக்கப்பட்ட உலகம், அவனால் காக்கப்படுதல் 'திதி' எனப் பெற்றது. தன்னால் தோற்றுவிக்கப் பெற்றுக் காக்கப்பெற்ற உலகத்தை, ஒடுக்குகிறான். அவன் வினை உலகத்தை ஒடுக்கிக் கொள்ளல் எனினும், அதனைத் தன்னுள் ஒடுக்கிக் கொண்டதால், அவ்வுலகம் ஒடுங்குவதற்குக் காரணமாக இருப்பவன் அவன் ஆகலின், ஒடுங்கி எனப் பெயர் பெற்றான்.

துறவோர் ஒடுங்கிய இடங்கள் ஒடுக்கம் எனப் பெறுகின்றன. அந்த ஒடுக்கங்கள் வேறு! அவை, ஒடுக்கம் செய்யப்பெற்ற இடங்கள். அவையே, உடலைத் தன்னுள் ஒடுங்க வைத்துக் கொண்டவை அல்ல! ஆனால், இறைவனோ உலகம் ஒடுங்கு வதற்கு இ L னாக இருத்தலால் ஒடுங்கியாகின்றான். நடுக்கத்திற்கு இடமாக இருப்பவன் ஒடுங்கியானான் என்க. இறைவனின் மெய்யியல் அறிந்து சூட்டப் பெற்ற பெயர் 'ஒடுங்கி' என்க.