உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188

மூவினை :

இளங்குமரனார் தமிழ்வளம் - 37

'மூவினை' எனினும் 'முத்தொழில்' எனினும் 'முச்செயல்' எனினும் ஒன்றே. மூவினை எதற்கு உண்டு? மேலே சுட்டிய அவைக்கு உண்டு! உலகுக்கு உண்டு! உலகியற் பொருள்கள் அனைத்துக்கும் உண்டு. மூவினை எவை? கூட்டக் கூடியது ஒன்று. நிகழ்த்த நிகழ்ந்தது இரண்டு; நிறைவிக்க நிறைந்தது மூன்று! அவைக்குரிய இம்மூன்றும் உலகுக்கும், பொருள்களுக்கும் உண்டென்பதெப்படி?

“உலகம் யாவையும் தாமுள வாக்கலும் நிலைபெ றுத்தலும் நீக்கலும்”

என்னும் கம்பர் வாக்கு மூவினை விளக்கமும், மூவினை முதலாம் முதல்வன் விளக்கமும்தாமே! படைத்தல் காத்தல் அழித்தல் என்பவைதாமே மூவினை! ஆற்றின் செயலை அல்லது நீரின் செயலை மூவினைப்படுத்துதல் தமிழர் மரபு.நீர்,படைப்பு, காப்பு, அழிப்பு வினைகளைச் செய்தலால் இறைவணக்கத்தை அடுத்து வான்சிறப்பு வைத்தல் தமிழர் மரபாயிற்று.

கடலுக்குப் 'புணரி' என்பதொரு பெயர். ஆறுகள் கூடிக் கலத்தலால் கடல் புணரியாயிற்று! நீர்க்கலப்பு, புணரி யாவதுபோல், சொற்கலப்பு 'புணர்ச்சி' எனப்பெறுவதா யிற்று. புணர்ச்சியின் வகையை இரண்டாகப் பகுப்பர். ஒன்று இயல்புப்புணர்ச்சி; மற்றொன்று 'விகாரப் புணர்ச்சி; விகாரப் புணர்ச்சி முக்கூறுபட்டது. அவை தோன்றல், திரிதல், கெடுதல் என்பன.

உலகும், இயல் நிலையில் இருந்து, விகார நிலைக்கு வருங்கால் தோன்றல் திரிதல் கெடுதல் ஆகிய மூவினைக்கு உட்படும்! தமிழர் தம் மெய்யுணர்வுக் கோட்பாடுகளே, அவர்தம் இலக்கணத்தில் பொதிந்து கிடத்தல் இத்தகைய ஆட்சிகளால் புலப்படும்.

ஆக, உலகாம் அவை மூவினைகளையுடையது என்பது கொள்க.

தோற்றிய திதியே ஒடுங்கி :

மூவினையை உளவாக்கல், நிலைபெறுத்தல், நீக்கல் என்றும், படைத்தல் காத்தல் அழித்தல் என்றும் பிறவாறும் பிறர்பிறர் கூறினாராக மெய்கண்டார், 'தோற்றிய திதியே ஒடுங்கி' என்றார்.