உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞானபோதம்

191

ஆதியும் இல்லா அருளாளன். உலகின் அந்தமும் ஆதியுமாம் அமைவு இது! பாவகையிலே அந்தாதி கண்ட திறவோம், ‘ஆதிபகவனை’க் கண்டு தெளிந்த வகை இது!

என்மனார் புலவர்:

இறைவன் உயிர் மலம் என்னும் முப்பொருள் கூறுகளையும் செந்தமிழ்ச் சிவஞான போதச் செல்வர் மெய்கண்டார்தாம் கண்டாரோ? அவர்க்கு முந்தையோர் கண்டிலரோ? கண்டவர் உளராயின் அவர்தாம் யாவர்? என வினவுவார்க்கு விடையாக 'என்மனார் புலவர்' என இயம்பினார் மெய்கண்டார்.

'என்று சொல்லுவர் மெய்ப்பொருள் வல்ல புலமை யாளர்" என்பது என்மனார் புலவர் என்பதன் பொருளாம். செழுஞ்செந்தமிழில் செம்பொருள் துணிவு நூல்கள் பல இருந்தன என்றும், அவற்றை ஆக்கிய அந்தண்மை மிக்க செந்தண்மையாளர் பலர் என்றும், அவர் கூறிய வழியே வழியாகக் கூறினேன் யான் என்றும் 'என்மனார் புலவர்' என்பதால் விளக்கினார் ஆசிரியர்.

66

இம்முழுப் பொருளையும் சுட்டும் முதல் நூற்பா:

'அவன்அவள் அதுவெனும் அவைமூ வினைமையின்

தோற்றிய திதியே ஒடுங்கி மலத்துளதாம்

அந்தம் ஆதி என்மனார் புலவர்'

""

கடவுள்,உயிர், மலம் என்பவை சமய நூலாரால் முப் பொருள்கள் எனப்படும். வை 'பதி, பசு, பாசம்' என வட நூலாரால் சுட்டப்பெறும்.

கடவுள் என்று உண்டோ அன்றே உயிரும் உண்டு; அவ்வுயிருக்கு மலமும் உண்டு, மலமாவது என்ன? செம்பில் களிம்பு இருப்பதுபோல்,உயிரிடத்தே மலம் இருக்கிறது! செம்பில் களிம்பு எப்பொழுது தோன்றியது? செம்பு தோன்றிய போதே களிம்பும் தோன்றியது. அதுபோல் உயிர் தோன்றிய போதே அதனுடன் மலமும் தோன்றியது. செம்பில் களிம்பு நீங்கினால் சுடர்விடும். உயிரில் மலம் நீங்கினால் ஒளியெய்தும்! உயிருக்கும் மலத்துக்கும் உள்ள தொடர்பு, செம்புக்கும் களிம்புக்கும் உள்ள தொடர்பே! இதனைத் தொல்பழந் தொடர்பு என்பர். 'அனாதி சம்பந்தம்' என்பர் வடநூலார்.