உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192

-

இளங்குமரனார் தமிழ்வளம் 37

"அவன் என்றும் அவள் என்றும் அது என்றும் குறிக்கப் பெறும் அண்டத் தொகுதி படைப்பு, காப்பு, அழிப்பு என்னும் முத்தொழில்களை உடைமையால், ஒருவனால் படைக்கப்பட்ட உள்பொருளேயாம். அது மல நீக்கத்தின் பொருட்டு, தான் ஒடுங்குதற்கு இடனாக இருந்த கடவுளினின்றும் மீண்டும் தோன்றுவதாம். ஆதலால், அந்தமாக இருக்கும் அவனே, முதலும் ஆகிறான் என மெய்ப்பொருள் ஆய்வாளர் கூறுவார்" என்பது இந்நூற்பாவின் பொருளாம்.