உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாம் நூற்பா

அவன், அவள், அது என்றும் சுட்டப்பெறும் உலகுக்கு அந்தமும் ஆதியுமாக இருப்பவன் இறைவன் எனக் கண்டோம். அவன் எவ்வாறு இருப்பன்? எங்கு இருப்பன்?

'இறைவன்' என்னும் பெயராலேயே இறைவன் இருப்பை முன்னோர் தெளிவித்தனர். இறைவன் என்பதற்கு, 'எங்கும் தங்கி இருப்பவன்' என்பதே பொருளாம்.

'இறைவன் எங்கே இருக்கிறான்?' என வினாவுவார்க்கு, 'அவன் எங்கே இல்லை?' என்று எதிர்வினா வினாவுவர்! 'இறைவன் எங்கும் இருக்கிறான்' என்று உடன்பாட்டு விடையும் கூறுவர். இவை இறைவன் எங்கும் உளன் என்பதைத் தெளிவிப்

பனவாம்.

CC

'பாலில் நெய் எங்கே யுள்ளது? பழத்தில் சுவை எங்கே யுள்ளது? தேனில் இன்பம் எங்கே உள்ளது? எங்கும் உள்ளதே யன்றோ! இவற்றைப்போல், இறைவன் எங்கும் உள்ளவனே" என உவமையால் விளக்குவர் மெய்யுணர்வாளர். இறைவன் இருப்பை மிக நுண்ணிதாக விளக்குகிறார் மெய்கண்டார்.

அவையே தானே ஆய்

இறைவன் அவையே ஆயும், தானே ஆயும், அவையே தானே ஆயும் இருக்கிறான் என்று கூறுகின்றார். 'அவையே தானே' என இரண்டு நிலையாய்க் கூறினும், அவ்விரண்டனை யும் இணைத்துக் காணும் முந்நிலைப்படத் தொடரை அமைத்துள்ளார்.

அவையேயாய் நிற்றல்

உலகமாகிய அவை வேறு, தான் வேறு என்று இல்லாமல் ஒன்றாகக் கலந்து நிற்கும் நிலையே அவையேயாய் நிற்றலாம்.

உடலுக்குள் உயிர் வேறாய் இல்லாமல், அவ்வுடல் எங்கும் கலந்து இருப்பதுபோல உயிர்கள்வேறு தான்வேறு என்று இல்லாமல் உயிர்களில் எல்லாம் கலந்து நிற்றல் அவையேயாய் நிற்றலாம்.