உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194

-

இளங்குமரனார் தமிழ்வளம் 37 *

"உயிர் தொறும் ஒளித்துநின்ற வஞ்சக்கள்வன்' என்பார் திருவிளையாடலார்.

வளர வளரும் வளர்ந்தநிலை, 'அவையேயாய் நிற்றல்' என்பது, முருகி உருகி நிற்கும் நிறைவாளர்க்கு உரிமையாதலை உணர்வார், இறைநிலை அஃதென எளிதில் அறிவர்.

66

த்

சுடும் உணவை உண்ணேன்; உண்ணின் என் உள்ள, துறையும் என்னவரைச் சுடும்" என்பாள் ஒரு காதலி என்னின், அவள் அவனாய் நிற்றல் அன்றோ!

66

என் உள்ளத்தைப் பிளந்து கண்டால் அங்கே என்ன காண்பாய்? நின்னைக் காண்பாய்" என்று ஒரு நண்பன் கூறினான் எனின், அவன், அந்நண்பனாய் நிற்றல் அன்றோ!

க்

'என் உயிர் கொண்டும் இறைவா! இவனுயிர்தா' என ஒரு தந்தையோ தாயோ வேண்டிக் கிடப்பரேல், அவர் அவனாய் நிற்றல் அன்றோ!

"எங்கே புயல்; எங்கே நிலநடுக்கம்; எங்கே தொற்றுநோய்; எங்கே வன்முறைக்கேடு; எங்கே அச்சுறுத்தல்; எங்கே அரற்றுதல் அங்கே யாம்" என்று அருளாளர் நிற்பரேல், அவர் அனைத்து யிராய் நிற்றல் அன்றோ!

'ஆட்டைப் பலியிடவா ஆகாது ஆகாது' என்று சொல்லி நொண்டியாட்டைத் தோளில்மேல் போட்டுக்கொண்டு கால் கடுக்க நடந்த அருளாளர் வரலாறு சொல்வது என்ன? அதுவாய் நிற்றலே அன்றோ!

"இந்த ஆட்டை வரைந்த ஓவியன் ஆடாகவே மாறித்தான் வரைந்திருக்க வேண்டும்" என்றும், "இவன் வரைந்த சிறுமணிப் புறாவைப் பார்க்கும் போது கல்லைப் பொறுக்கித் தின்ன வேண்டும் என்று ஆர்வம் எனக்கு எழுகின்றது" என்றும் ஒரு கலைஞனை ஒரு கலைஞன் கூறினான் எனின், அவ்விருவரும் அவையாய் நிற்றலே அன்றோ!

பலப்பல குறைகளையுடைய மாந்தனே அவையாய் நிற்க இயலுமெனின், குறைவிலா நிறைவாம் இறைமை அவையாய் நிற்றற்கு ஐயுறவும் உண்டோ?

தானாய் நிற்றல் :

இறைவன் தானே ஆய் நிற்றல் என்பது உலகொடும் உயிர்களோடும் கலவாமல் வேறாகத் தனித்து நிற்கும் நிலையாம்.