உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞானபோதம்

195

கதிரோன் ஒளியால் கண் பார்க்கிறது; பார்த்தாலும், கதிரோனும் கண்ணும் ஒன்றோ? இல்லை! கதிர் வேறாகவும் கண்வேறாகவும் இருப்பது போல, இறைவனால் உயிர்கள் அறிந்தாலும் உயிரும் இறையும் ஒன்றல்ல. உயிர் வேறாம்; இறை வேறாம்.உயிரையும் உலகையும் விடுத்து இறை தனித்து நிற்கும் நிலையே தானாய் நிற்றலாம்.

'கூத்தாட்டு' என்பது பழைமையானது. கூத்தாட்டு அவை வள்ளுவரால் பேசப்படுகிறது. 'கூத்தச் சாக்கையன்' இளங்கோவடி களாரால் இயம்பப்படுகிறான். இறைவனே 'கூத்தப் பெருமான்' எனக் கொஞ்சப்படுகிறான். "அவரவரைக் கூத்தாட்டுவானாகி" என்கிறார் மணி மொழியார்.

கூத்தாட்டுபவனும் கூத்தாடுபவனும் வேறு வேறானவர் என்பதை எவரே அறியார்? இதனை ஒருமுறை கூறினால் போதாது என்று தானே நாவுக்கரசர், ஏழு முறை கூறினார் : 'வலியுறுத்தல் நிலைபெறுத்தும்' என்பது இந்த விளம்பர உலகம் அறியாத ஒன்றன்றே:

“ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே; அடக்குவித்தால் ஆரொருவர் அடங்கா தாரே; ஓட்டுவித்தால் ஆரொருவர் ஓடா தாரே; உருகுவித்தால் ஆரொருவர் உருகா தாரே;

பாட்டுவித்தால் ஆரொருவர் பாடா தாரே;

பணிவித்தால் ஆரொருவர் பணியா தாரே; காட்டுவித்தால் ஆரொருவர் காணா தாரே;

காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக் காலே"

ஏழு காட்சிகளை விளக்கி, ஏழின் நிறைவாய்க் “காண் பாரார் கண்ணுதலாய் காட்டாக் காலே" என்று கூறி, காண்பானும் காட்டுவானும் தனிமைப் பட்டிருத்தலை விளக்கினார்.

கொடும் போரின் இடை டையேயும் நெப்போலியன் ஒரு கணக்கிலே மூழ்கியிருக்க முடியுமானால், குண்டு வெடிக்கும் போதும் அதிர்வின்றி உரையாற்றிக் கொண்டிருக்க விவேகானந் தரால் முடியுமானால், தவநிலையில், கட்டையென அறியாரால் சுட்டெரிக்கப்படும் போது தம்மை உணரும் நிலைவந்து முற்று மெரித்துவிடச் சொல்ல ஒரு தாயுமானவரால் முடியுமானால், பெண்ணையாற்றின் இடைப்படு கல்லில் எரியூட்டிப் பாரியைப் பிரிந்திருக்க ஒண்ணாத கபிலரால் தாமே கனல் புக முடியுமானால்-