உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196

இளங்குமரனார் தமிழ்வளம் 37

றைவனால் தானாய் நிற்க முடியாதோ? அவன், அருளிப் பேற்றாளன்; அவன் அருட்கானோர் இவர்; அருட்கானோர் திறமே ஈதென்றால், அருளியோன் திறத்தை அளந்து காணவும், காட்டவும் வேண்டுமோ? படைப்பான், படைப்புப் பொருளுக்கு அப்பால் இருப்பவன் என்பதை எவரே அறியார்?

அவையே ஆயும் தானே ஆயும் நிற்றல் :

உயிரும் உடலுமாய்க் கலந்து நிற்கும் நம்மிடம், உயிர் வேறு உடம்பு வேறு எனப் பிரித்துக் காண முடிவதில்லையே! அவ்வாறு காணாதபடி, உயிர் உடலோடு கலந்து ஒன்றாய் நிற்கின்றது. அதுபோல், இறைவனும் உலகில் கலந்து ஒன்றாய் நிற்கின்றான் என்பதே, 'அவையே ஆயும் தானே ஆயும்' நிற்றலாம்.

-

கண் ஒரு பொருளைப் பார்க்கிறது. கண் மட்டுமோ பொருளைப் பார்க்கிறது? கண்ணொடும் உயிரின் அறிவும், அக் கண்ணொளியோடும் உடனாக இருந்தன்றோ காண்கிறது? உயிரறிவும் கண்ணொளியோடு ணையாக்கால் காட்சி யென்பதும் ஒன்று உண்டோ? உயிராகியும் ஒளியாகியும் இருத்தல் அவையேயாயும் தானே ஆயும் நிற்றல் அன்றோ! ஒளிக்கு மட்டுமோ உயிரறிவு உடனாகின்றது? கேள்விக்கு, முகர்வுக்கு, சுவைக்கு, ஊற்றுக்கு, நினைவுக்கு எல்லாம் உடனாகி நின்று அவையேயாகியும் தானேயாகியும் உயிர் நிற்குமென்றால், உயிர்க்கு உயிராம் இறைவன் அவையேயாய், தானேயாய் நிற்றல் எளிதுற விளக்கமாகும் அன்றோ!

தொண்டராய் இருக்குங்கால் தொண்டராய், தலைவராய் இருக்குங்கால் தலைவராய் இருப்பார் இலரோ?

அலுவலராய் இருக்குங்கால் அலுவலராய், மற்றை இடங்களில் அன்பராய், நண்பராய், தாயாய், தந்தையாய், மக்களாய், ஊழியராய், உறவாய் இருப்பார் இலரோ?

மாணவரிடம் ஆசிரியராய் இருப்பார், மற்றை இடத்து மாணவராய் இருப்பார் இலரோ?

இவ்வாறு இருத்தல், 'எந்நிலையில் இருந்தாலும் தம்நிலை மறவாது போற்றவல்லார்க்கு உடைமையாதல்' கண் கூடே! இத்தகு திறம் வல்லார்க்கு இவை கூடுமெனின்,கூடாதன வெல்லாம் கூட்டவல்ல, இறைவனுக்குக் கூடியிருப்பது அரிதாமோ? இவை, 'அவையே தானே ஆய்' இறை நிற்கும் முந்நிலையாம்.