உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருவினையின் :

சிவஞானபோதம்

197

இருமைக்குப் பல பொருள் உண்டு. கருமை, பெருமை என்பனவும் இரண்டு என்பதும் குறிக்கத்தக்கன. இருவினை கருவினையாம். கருவினையாவது வல்வினை; கருங்கை என்பது வலியகை என்பது போல! இருவினையை ‘வல்வினை' என்றும் மேலே ஆளுவார் (நூற். 10). இனி, இருவினை என்பது கடத்தற்கு அரிய பெரிய வினையாம்; இருள் வினையுமாம். இவையன்றி நல்வினை தீவினை எனப்பெறும் இரண்டு வினையுமாம். "இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு" என்பார் திருவள்ளுவர். "இறையருள் பெற்றார் வினைநீக்கமுற்றார் என்பது இதன் குறிப்பு. "வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன்" என்பார் தொல்காப்பியர். இவற்றால், வினை நீக்கமே விடுதலை அல்லது வீடுபேறு என்றாம். வினைநீக்கம் என்பது செயலற்றுக் கிடத்தல் அன்று; பயன் கருதிச் செய்யாதிருத்தலே வினைநீக்கமாம்.

ரு

வினை நீக்கம் வேண்டுமோ என்றும், அதிலும் இரு வினையுள் ஒன்றாகிய நல்வினை நீக்கமும் வேண்டுமோ என்றும் வினவுவார் உளர். இருவினையால் பிறப்பும் இறப்பும் உண்டா தலால், பிறப்பறுக்க விரும்புவார் இருவினை நீக்கம் கொள்ளல் வேண்டுவதேயாம்.

தீவினையைக் கட்டாயம் நீக்கவேண்டும். நல்வினையையும் நீக்கவேண்டுமோ? ஆம்; நல்வினையை அதன் பயனீடு கருதி யன்றோ மாந்தர் செய்கின்றனர்; மறுமை நோக்கிக் கொடுப்பார் எடுப்பார் உள்ள உலகில் "மறுமை நோக்கியதன்று அவன் கொடை வண்மை; சான்றோர் செல்லும் நெறி என்பதை நோக்கியே கொடுப்பதை அன்றிப் பயனொன்று கருதிக் கொடான்' என்னும் புறப்பாட்டு நல்வினை செய்யும் பான்மையை நன்கு வலியுறுத்தும். புகழுக்கு விரும்பிக் கொடுக்கும் கொடையைப் "புறஞ்சுவர்க்கோலம் செய்தல்" என்று கூறும் வில்லிபாரதம்! ஆதலால் நல்வினையைப் பயன்கருதா உள்ளத்தோடு செய்ய வேண்டும் என்பதே மெய்ப்பொருளாளர் கருத்து. இரும்பு விலங்கானால் என்ன? பொன் விலங்கானால் என்ன? விலங்கு விலங்குதானே!

"ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள்