உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞானபோதம்

199

செய்கின்றனனா? பிறரைக்கொண்டு செயலாற்றுகின்றனனா? இதற்கு விளக்கம் தருவார் போலவே, 'ஆணையின்' என்றார் மெய்கண்டார்.

ஆணையின் :

இறைவன் ஆணையால் செயலாற்றும் திருவருளுக்கு 'ஆணை' என்பது பெயர். கட்டளையை நிறைவேற்றும் துறவிக்குக் 'கட்டளைத் தம்பிரான்' என்று பெயர் இருப்பதுபோல!

உயிர்கள் நினைக்கின்றன; சொல்கின்றன; செயலாற்று கின்றன. இவையெல்லாம் வினையே. நினைவு, சொல், செயல் ஆகிய இவ்வினைகள் அறிவுள்ளனவோ எனின் இல்லை; இவ் வினைகளின் பயனும் அறிவுள்ளனவோ ளனவோ எனின் இல்லை. வினைகளும் வினைப்பயன்களும் அறிவில்லாதவை ஆதலால், வினையுடையானை இவை தாமே தேடிச் சென்றடையமாட்டா! சென்றடையுமாறு கூட்டுதற்கே இறைவன் திருவருளாணையைச் செலுத்துகின்றான். அவ்வாணையால் உயிர்கள் உடல் கருவிகளைக் கொள்கின்றன. உடல்கருவிகளைக் கொள்வதே பிறப்பாகவும், அவற்றில் நீங்குவதே இறப்பாகவும் அமைகின்றன. இவற்றைத் திருவருள் ஆணையால் இறைவன் செய்விக்கின்றான் ஆகலின், 'ஆணையின் போக்குவரவு புரிய' என்றார் ஆசிரியர்.

பல்லாயிரம் ஆக்கள் ஓரிடத்து இருப்பினும் ஒரு கன்று தன் தாயைக் கண்டுகொள்வது போல, வினையும் வினையுடை யானைச் சேரும் என்பர்! ஆனால், "வினை, தானே வினையுடை யானைச் சேரும் தன்மைத்தன்று. இறையருள் கூட்டலால் சேரும்' என விளக்கினார் ஆசிரியர். செலுத்தும் ஒன்று இல்லை யேல், செலவென்பது ஒன்று இல்லையே! இயக்குவது அல்லது இயக்குவோன் இல்லையேல் இயக்கம் என்பது ஒன்று இல்லையே! ஆகலின் வினையை இயக்கும் திருவருளாணையைத் தெரிவித்தார் ஆசிரியர். ஆயின், இறை வேறு திருவருளாணை வேறு என்று ஆகின்றதே! இறை நிற்கும் நிலையென்ன? திருவருளாணை நிலை என்ன? என்று வினவுவார் உளராயின் அவர்க்கு விடை வேண்டுமே என்னுங்கருத்தால் மேலே சுட்டுகிறார் மெய்கண்டார். நீக்கம் இன்றி நிற்கும்:

இறையும் ஆணையும், நீக்கம் இன்றி-பிரிதல் இன்றி- நிற்குமாம். நீக்கம் இன்றி நிற்பது ஆணையா இறையா என்பார்க்கு, 'இறை' என்று குறித்தற்காக ஆணையின் நீக்கம்