உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞானபோதம்

உணர்த்த உணர்தலின் ஆன்மா உளது :

207

றைவனுக்கு எண்ணிறந்த தன்னியல்புக் குணங்கள் உள. அவற்றுள் இரண்டு குணங்கள், தானே அறிகிற குணமும், ஆன்மாவிற்கு அறிவிக்கிற குணமுமாம்."

"ஆன்மாக்களுக்கு எண்ணிறந்த தன்னியல்புக் குணங்கள் உள. அவற்றுள் இரண்டு குணங்கள், அறிவித்தால் அறிகிற குணமும், தானாகப் பிறருக்கு அறிவிக்க மாட்டாத குணமுமாம்" என முப்பொருள் ஆய்வு நூல் (திரி பதார்த்த சிந்தனை) மொழியும். ஆதலால், உணர்த்தாமலே உணரவல்ல இறையறிவே (சைதன்யமே) உயிர் எனின், ஆன்மாவிற்கு எதையும் தானே அறியும் திறம் இல்லையே; அறிந்தோர் அறிவிக்கவே அறியும் குறையும் உடையதாமே? இவ்வாறாக இறையறிவே உயிர் என்பது பொருந்தாதாம். ஏனெனில் ஆன்மாவின் அறிவு, உணர்த்த உணரும் சிறுமையுடையது என்பாராய் 'உணர்த்த உணர்தலின் ஆன்மா உளது' என்றார்.

இவ்வாறு பகுத்தும் பிரித்தும் ஆசிரியர் உயிருண்மையை விளக்கவேண்டுவது என்ன?

சிலர், ஆன்மா என்பதொன்றே இல்லை என்றனர்; சிலர், உடலே ஆன்மா என்றனர்; சிலர், பொறிகளே ஆன்மா என்றனர்; சிலர், நுண்ணுடலே ஆன்மா என்றனர்; சிலர் மூச்சுக் காற்றே ஆன்மா என்றனர்; சிலர், இறையறிவே ஆன்மா என்றனர்; சிலர், உடல் முழுமையும் கூடிய ஒன்றே ஆன்மா என்றனர். இவ்வெழுவர் தம் கொள்கைகளை முறைமுறையே மறுத்து அவற்றின் வேறாம் ஆன்மாவின் உண்மை காட்டுவாராய் இந்நூற்பாவை மெய்கண்டார் அருளினார் என்க.

இதுவரை கண்ட மூன்று நூற்பாக்களிலும் இறைவன் ஒருவன் உளன் என்றும், அவன் உலகுக்கு அந்தமும் ஆதியுமாக இருக்கிறான் என்றும், இறைவன் உயிர்களேயாகியும், உயிர் களுக்கு வேறாகியும், உயிர்களுக்கு உடனாகியும் இருந்து திருவருள் ஆணையால் பிறப்பு இறப்புகளைச் செய்விக்கின்றார் என்றும், உயிரென்பது உளது என்றும், அவ்வுயிர் இல்லதோ, உடலோ, பொறியோ, நுண்ணுடலோ, மூச்சோ, இறையறிவோ, உறுப்புத் தொகுதிகளோ அன்று; அவற்றின் வேறானது என்றும் உரைத்தார். மேலும் உயிரைத் தொடர்ந்து ஆய்கின்றார்.