உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206

இளங்குமரனார் தமிழ்வளம் - 37 37ஓ

வல்லனவாய் உள்ளன? ஆனால் ஐம்புல உணர்வையும் ஒருங்கே அறிந்துகொள்ளும் ஒன்று இருக்கிறதே! அதுவே ஆன்மாவாம்; என்பாராய் 'ஐம்புலன் அறிதலின் ஆன்மா உளது' என்றார்.

ஒடுக்கம் அறிதலின் ஆன்மா உளது :

ஆசிரியர், 'ஐம்புலன் ஒடுக்கம் அறிதலின் ஆன்மா உளது' என்றாராயினும், அதன் பொருட்பாடு கருதி, 'ஐம்புலன் அறிதலின் ஆன்மா உளது' என்றும், 'ஒடுக்கம் அறிதலின் ஆன்மா உளது' என்றும், பிரித்து இ ணைத்துக் கொள்ள வேண்டியதாயிற்றாம்! செறிவாகவும் செம்மையாகவும் கூறுதல் ஆசிரியர் கடைப்பிடி யாகலின், அவர்தம் செந்நெறியுணர்ந்த உரையாசிரியர்கள் இவ்வாறு பிரித்து இணைத்துக் குறைவிலா நிறைவுரை கண்டன் ராகலின் அவர் முறையே முறையாய் உரை வகுக்கப்பெற்ற தென்க.

ஒடுக்கம் என்பது நுண்ணுடல். அதனை வடமொழியாளர் 'சூக்கும உடம்பு' என்பர். கனவின்கண் பருவுடல் எங்கோ ஓரிடத்திருக்க, நுண்ணுடல் எங்கோ ஒரு காட்சியைக் கண்டு உணர்ந்து கொள்கின்ற தன்றோ! அந்நுண்ணுடல் காட்சியை விழித் தெழுந்த காலை, பருவுடல் கண்டதாகக் கூறுவது வழக்கம் அல்லவோ? அவ்வாறாயின் நுண்ணுடல் காட்சியைப் பருவுடற் காட்சியாக்கிக் காட்டத் தக்க ஒன்று உள்ளது அன்றோ! அவ்வொன்றே ஆன்மாவாம், என்பாராம் 'ஒடுக்கம் அறிதலின் ஆன்மா உளது' என்றார்.

கண்படில் உண்டிவினை இன்மையின் ஆன்மா உளது :

கண்படில் என்பது உறங்குதல்; உண்டிவினை என்பது இன்ப துன்ப நுகர்வுகள். உறங்காமல் விழித்திருக்கும் போதில், இன்ப துன்ப நுகர்வுகள் உண்டாகின்றன. உறங்கும்போது இன்ப துன்ப நுகர்வுகள் உண்டாவது இல்லை. ஆனால், விழித்திருக்கும் போது எந்த மூச்சுக்காற்றை உள்ளிழுத்து வெளி விட்டோமோ, அதே மூச்சுக் காற்றே உயிர் என்றால் விழிப்பின்னோது உண்டாகிய இன்ப துன்ப நுகர்ச்சிகள் உறக்கத்தின் போதும் தோன்ற வேண்டும் அல்லவோ? அவ்வாறு தோன்றாமையால் மூச்சுக் காற்றின் வேறாக உயிர் இருக்கவேண்டும் என்பது தெளிவாம். இதனைக் கருதியே உண்டிவினை இன்மையின் ஆன்மா உளது என்று ஆசிரியர் தெளிவித்தார். ஒடுங்கிய இடத்திலும் ஒடுங்காத இடத்திலும் இன்ப துன்பங்களை அறிவதே உயிர் என்பதால் மூச்சுக்காற்றே உயிர் என்பது பொருந்தாது என மறுத்தார்.