உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞானபோதம்

லது என்றலின் ஆன்மா உளது :

205

'இல்லதற்கு இல்லை பெயர்' என்பது பழமொழி. இல்லாத ஒன்றற்குப் பெயர் எப்படி இருக்கமுடியும்? 'பாழ்' என வான் வெளியைக் குறிக்கின்றனர்! வெளியாக இருத்தல் ருத்தல் உண்மை யால் தானே அதற்கொரு பெயர் வைத்தனர்? அவ்வாறே 'உயிர்' என ஒருபெயர் உண்மையாக இருக்கும்போது, அதனை 'இல்லை' என்று எப்படிச் சொல்லலாம்? 'இல்லை' என்று ஒன்று சொல்லு மானால், அதனைச் சொன்னது எதுவோ, அதுவே உயிர்தானே! இல்லை என்று சொன்னதே உயிர் உள்ளது என்பதனை விளக்கு கின்றது அல்லவா! இவ்வாறு 'இல்லை' என்பாரைக் கொண்டே, உயிர் உண்டு என்பதை எடுத்த எடுப்பிலே நிலைப்படுத்தினார் ஆசிரியர். இல்லை என்று கூறுவார் உளரா? உடல், உயிர் இல்லை; பொறிகள், உயிர் இல்லை; மனம், உயிர் இல்லை- இப்படி ஒவ்வொன்றாய்ப் பார்த்தால் 'உயிர் இல்லையே' என்று சொல்வார் இருந்தனர்! அதனால் அவர்க்கு மறுமொழியாக 'இலது என்றலின் ஆன்மா உளது' என்றார்.

எனதுடல் என்றலின் ஆன்மா உளது :

உடலைப் பிரித்துப் பிரித்துப் பார்த்து ஆன்மா இல்லை என்பார் சிலராக, சிலரோ உடலையே ஆன்மா எனக் கொண்டனர். ஆனால், உடல் ஆன்மா ஆகுமோ எனின் இல்லையாம். உடலே ஆன்மாவாக இருந்தால், எனது உடல்' என்று சொல்ல வேண்டுவது என்ன? ‘எனது' என்று உரிமை கொண்டது எதுவோ, அதுவே யல்லவோ ஆன்மா? ஆதலால், எனதுடல் என்று சொல்லுமுகத்தானே உடல், ஆன்மா இல்லை என்றும், அதனை உரிமை கொண்டாடும் ஒன்றே ஆன்மா என்றும், தெளிவாகின்றதே என்பாராய் ‘எனதுடல் என்றலின் ஆன்மா உளது' என்றார்.

ஐம்புலன் அறிதலின் ஆன்மா உளது :

ஐம்பொறிகள் என்பவை மெய் வாய் கண் மூக்கு செவி என்பன. ஐம்புலன்கள் என்பவை ஊறு, சுவை, ஒளி, நாற்றம், ஓசை என்பன. மெய்யில் ஓரிடத்தில் தேனை வைத்தால் அதன் இனிமை புலப்படுமோ? அதனை நாவில் வைத்தால் அல்லவோ சுவை தெரிகின்றது? கண்ணில் ஒளி தோன்றுகின்றது. அதே கண்ணில் சுவையோ நாற்றமோ கேள்வியோ தெரிவதில்லையே? செவியில் ஓசை கேட்கின்றது. ஒளியோ சுவையோ நாற்றமோ புலப்படுவது இல்லையே! ஒவ்வொரு புலனும் ஒவ்வொன்றைத் தானே உணர