உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*

சிவஞானபோதம்

219

காலை அரும்பிப் பகலில் போதாகி மாலையில் மலர்ந்து மறுநாளில் மடிந்துபோகும் மலர் உணர் உரு உடையது. அது நாண்மலர் (ஒருநாள் வாழ்வுடைய மலர்; அன்று மலர்ந்த மலர்) ஆகி அழிவது கண்கூடு.

காக்கைக்கே வந்தேன்' என ஆட்சியேற்றுக் கொண்டு இருக்கிறான் காவலன். ஆனால், அவன் தன் உடலைக் காத்துக் கொள்ளவும் இயலாமல் காக்கைக்கே இரையாகிப் போகின்ற காட்சி கண்டறியாததோ? ஊர்நோயெல்லாம் தீர்ப்பேன் என உறுதி கொண்ட மருத்துவனும், தன் நோயைத் தீர்க்கமாட்டாமல் பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச் சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிடக் காணல் நாம் அறியாததோ?நிலை பேறமைந்த உயிர் குடியிருந்த குடியிருப்பாம் உடல் நிலையே இவ்வாறாயின், ஏனையவற்றைச் சொல்ல வேண்டுமோ?

இறைவன் இவ்வாறு உணர் உருவாக இருந்தால் அவன் நிலை பொருள் (சத்துப் பொருள்) ஆவானோ? ஆதலால் உணர் உரு எனின் அசத்து என்று தெளிவித்தார் ஆசிரியர்.

உணராது எனின் இன்மை :

இன்மை யாவது இல்லாமை; அஃதாவது பாழ்; 'சூனியம்' என்பதும் அது.

எவரானும் எவ்வகையானும் இறைவன் உணரப் பெறா தவன் என்றால், அவன் இருப்பவன் என்று எப்படிச் சொல்ல முடியும்? அவன் இல்லாதவன் என்றே கொள்ள நேர்ந்துவிடும் அல்லவோ!

"வானப் பூ நாறிற்று என்றுழி அது சூடக் கருதுவாரும் இன்றி மயங்கக் கூறினான் என்னும் குற்றத்தின் பாற்படும்" என்று இலக்கண உரையாசிரியர்கள் சுட்டுவர். எவரும் கண்டறியாத பூவை இருப்பதென எவரே கொள்ளுவார்? அதனைப் பறித்துச் சூடுதற்கோ சூட்டுதற்கோ எவரே முயல்வார்?

முயற் கொம்பு உண்டு என்றாலோ, ஆமை மயிர்க் கம்பலம் உண்டு என்றாலோ ஏற்றுக்கொள்வார் எவர்? நாம் காணும் முயற்குக் கொம்பு இல்லை; ஆமைக்கும் மயிர் இல்லை; ஆதலால், எவர் சொன்னாலும் ஏற்றுக்கொள்ளத் துணிவது இல்லை.

இறைவன் உண்மையை எவருமே அறிந்திலர் எனின், அவன் இல்லாதவன் ஆய்விடுவான். ஆதலால், “உணராது எனின்