உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறாம் நூற்பா

இறைவன் இலக்கணம் இன்னதென இந்நூற்பாவில் கூறுகிறார் ஆசிரியர் :

உணர்உரு அசத்தெனின் உணரா தின்மையின் இருதிறன் அல்லது சிவசத் தாமென

இரண்டு வகையின் இசைக்குமன் உலகே.

உணர்உரு எனின் அசத்து; உணராது எனின் ன்மை (ஆதலின்) இருதிறன் அல்லது சிவசத்தாம்; என, இரண்டு வகையின் மன உலகு இசைக்கும் என இயைத்துப் பொருள் கொள்ளுமாறு அமைந்து கிடக்கின்றது இந்நூற்பா. 'எனின்' என ஓரிடத்து நின்ற சொல்லை 'உணர் உரு எனின்' என்றும், 'உணராது எனின்' என்றும் ஈரிடத்தும் இயைக்கப்பெற்றதாம். இவர் இத்தகு உத்திகளால் நூற்பா யாத்தல் முன்னும் சுட்டப் பெற்றனவாம்; பின்னும் வருவனவாம்.

உணர் உரு எனின் அசத்து :

அசத்து என்பது சத்தற்றது; அதாவது நிலையற்றது. நிலையானது போல் தோன்றி நிலையற்று ஒழிவது அசத்தாம். அதனை 'அல்நிலை' எனலாம்; சத்து 'நிலை' யாகலின், சத்தாகிய 'நிலை' மெய்ப்பொருள் எனப்படும். ஆகலின், அசத்தாகிய 'அல்நிலை' பொய்ப் பொருள் என்பது தானே விளங்கும்.

ஒரு பொருளைக் கையால் தொட்டுணரவோ, வாயால் சுவைத்துணரவோ, கண்ணால் கண்டுணரவோ, மூக்கால் முகர்ந் துணரவோ, காதால் கேட்டுணரவோ கூடுமெனின் அப்பொருள் நிலையாத் தன்மையுடையதாய் அழிவதேயாம் என்பதைத் தெளிவிப்பதற்கு 'உணர் உரு எனின் அசத்து' என்றார் ஆசிரியர்.

புல்லின்மேல் படிந்த பனிநீர் தொட்டறியவும் கண்டறியவும் கூடுவது. அப்பனிநீர், கதிரொளி பட்ட அவ்வளவில் இல்லையாய் ஒழிதல் கண்கூடு. "மூங்கில் இலைமேல் தூங்கும் பனிநீரே; கதிரோன் உதயத்தால் வாங்கும் பனிநீரே" என்பது ஏற்றப்பாட்டு. "புல்நுனி மேல் நீர்போல் நிலையாமை" என்பது நாலடிப் பாட்டு.