உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞானபோதம்

"நானேயோ தவம்செய்தேன் சிவயநம எனப்பெற்றேன் தேனாய்இன் னமுதமாய்த் தித்திக்கும் சிவபெருமான் தானேவந்து எனதுள்ளம் புகுந்துஅடியேற் கருள்செய்தான்” என மணிமொழியார் கூறுவதும், அவரே,

"இரும்புதரு மனத்தேனை ஈர்த்து ஈர்த்து'

என்று உரைப்பதும் இவண் எண்ணத் தக்கனவாம்.

217

மரத்தில் இருந்து விழும் பழம், பக்கங்களிலோ மேலேயோ போகாமல் நிலத்தில் வீழ்தற்குப் பழமோ காரணம்? புவி ஈர்ப்பாற்றல் அன்றோ காரணம்! புவி ஈர்ப்பாற்றலே பழம் முதலியவற்றைத் தன்பால் ஈர்த்துக் கொள்ளுதல் போல் இறைவன் திருவருளே காந்தமாய், ஆன்மாவாம் இரும்பை ஈர்த்துக் கொண்டதாம்.

ஈர்ப்பாற்றல் ஒன்று இல்லை என்பதை எண் எண்ணுவோம். அப்பொழுது செயற்பாடுகளும் இயக்கங்களும் எப்படி இருக்கும்? பொருள்கள் எல்லாம் எங்கே எப்படி இருக்கும்? ஈர்ப்பாற்றல் இல்லையேல் அண்டங்கள் எல்லாம் ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்ளாமல் இயலுமோ? உலகத் தோற்ற ஒடுக்கங்கள் தாமும் ஈர்ப்பாற்றல் இல்லையேல் நிகழ்வதுண்டோ? ஈர்ப்பாற்றல் தானே கோடி கோடிப்பேரை ஒருவர்பால் சேர்த்து அவர்வழி நிற்க வைத்து ஆளாக்குகின்றது?

இனி, இந்நூற்பா வருமாறு

“விளம்பிய உள்ளத்து மெய்வாய் கண்மூக்கு அளந்தறித் தறியா; ஆங்கவை போலத்

தாம்தம் உணர்வின் தமியருள்

காந்தம் கண்ட பசாசத் தவையே'

""

இதன் தொகு பொருள்; "மெய்வாய் முதலிய அறிகருவிகள் ஆன்மாவின் துணையால் பொருள்களை அறிகின்றன. அவ்வாறு அறியுமாயினும் அவை தம்மையும், தம்மை அறியச் செய்விக்கும் ஆன்மாவையும் அறியமாட்டா. அவற்றைப் போலவே ஆன்மாவும் திருவருள் துணையால் வினையாற்றி வினைப்பயனை நுகர்கின்றது. எனினும் அது, தன்னையோ, தனக்குத் துணையாய் உதவும் திருவருளையோ அறிதல் இல்லை, அருளால் செயற்படும் ஆன்மாவின் இயக்கம், காந்தத்தின் முன் இயங்கும் இரும்பின் இயக்கம் போல்வதாம்.