உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216

இளங்குமரனார் தமிழ்வளம் -37

காந்தம் கண்ட பசாசத் தவையே :

காந்தத்தால் கவரப்பட்ட இரும்பு போல ஆன்மாக்கள் இறையருளால் தம்மையும் தம்மையுடையானையும் உணரும் என்பதாம்.

காந்தம் இறையருளும், இரும்பு ஆன்மாவுமாம். கவர்வது காந்தம் என்பது கவரப்படுவது இரும்பு என்பது தெளிவே. கவரப் படுங்கால் காந்தம் அசைவுறுமோ இரும்பு அசைவுறுமோ என்பதை எண்ணின் காந்தம் அசையாதிருத்தலும், இரும்பு அசைதலும் விளங்கும். இறைவனின் அசைவின்மையையும், ஆன்மாவின் அசைவையும் உவமையால் ஆசிரியர் விளங்கச் செய்தார்.

காந்தத்தால் கவரப்பட்ட இரும்பை எண்ணும் நாம் கண்ணப்பரை எண்ணுதல் தகும். இறைவர் உறையும் மலைமேல் அவர் ஆர்வம் உந்த ஏறிச் செல்லும் செலவைச் சேக்கிழார், "பேணு தத்துவங்கள் என்னும் பெருகு சோபனம் ஏறி, ஆணை யாம் சிவத்தைச் சார அணைபவர் போல" என்றார். இறை வனைக் காணா முன்னே, “அருட்டிரு நோக்கம் எய்தத் தங்கிய பவத்தின் முன்னைச் சார்பு: விட்டகல நீங்கி"னார் என்று மேலும் தெரிவிக்கிறார். இறைவனைக் கண்ட பின்னர் "வங்கினைப் பற்றிப் போகா வல்லுடுப்பு போல" நீங்கா ராயினார் என உவமைப்படுத்துகிறார். இறை வழிபாட்டுப் பொருள் தேடுதற் குப் பிரிய நேருங்கால் "இனத்திடைப் பிரிந்த செங்கண் ஏறு” போலச் செல்வதையும், "மனத்தினும் கடிது மீள்வ"தையும் குறிக்கிறார். கண்ணப்பர் அருளில் தோய்ந்தமை, காந்தம் கண்ட பசாசம் போன்றதாம்.

தடுத்தாட் கொள்ளவந்த

சுந்தரர் செல்வதை,

றைவனைத் தொடர்ந்து

“திருமுகக் காந்தஞ் சேர்ந்த வல்லிரும் பணைபு மாபோல்"

எனச் சேக்கிழார் கூறுவதும் இவண் கருதத் தக்கதாம்.

C

காந்தம் கண்ட பசாசம்' என்பதற்கு காந்தத்தைக் கண்ட பசாசம் என்று பொருள் கொள்வதோ, காந்தத்தால் கண்டு கொள்ளப்பட்ட பசாசம் என்று பொருள் கொள்வதோ எனின், காந்தத்தால் கண்டுகொள்ளப்பட்ட பசாசம் என்பதேயாம். இறையருள் இல்லாக்கால் ஆன்மாவுக்குத் தன்னையறிதலும் தன்னையுடையானை அறிதலும் இல்லையென்பதைக் கண்டோமே? “காண்பாரார், கண்ணுதலாய் காட்டாக் காலே"

என நாவரசர் நவின்றதை அறிந்தோமே!