உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞானபோதம்

215

மெய் முதலிய பொறிகள் தம்மையும் அறியா,தம்மை இயக்கும் உயிரையும் அறியா என இருவகை அறியாமை உடைத்தெனக் கண்டோமே; உயிருக்கும் அத்தகைய இருவகை அறியாமையும் உண்டோ எனின் உண்டு என்பதை உறுதி செய்வதற்காகவன்றோ ஆசிரியர் 'ஆங்கவை போல...அறியா' என்றார். உயிரும் தன்னையும் அறியாது, தன்னையுடைய தலைவனையும் அறியாது என்பதாம். ஆயின் எந்நிலையிலும் உயிர் தன்னையும் தன்னையுடையானையும் அறியாதோ எனின் மெய்ப் பொருளாய்வால் எத்தகு பயனும் இல்லையாம்; பிறவிப் பயனென ஒன்றும் இல்லையாம்; உயிர் அவற்றை அறியுமாற்றை மேல்வரு நூற்பாக்களில் உரைப்பார். இவண் உயிர்க்குள்ள இரண்டு தன்மைகளை அறிந்துகொள்ளல் சாலும். அவை : அறிவித்தால் அறிகிற தன்மை, தானாகப் பிறருக்கு அறிவிக்க மாட்டாத தன்மை என்பவை.

அறிவித்தால் அறிகிற தன்மை உயிருக்கு இருத்தலால், 'அறிவிப்பார் எவர்' என வினா வெழும். அதற்கு விடையாவார் இறைவனும், இறையருள் கூடினாருமாம் என்க.

தன்னை யறியத் தனக்கொரு கேடில்லை

தன்னை யறியாமல் தானே கெடுகின்றான் தன்னை அறியும் அறிவை அறிந்தபின் தன்னையே அர்ச்சிக்கத் தானிருந் தானே”

"அறிவு வடிவென் றறியாத என்னை அறிவு வடிவென் றருள்செய்தான் நந்தி"

'என்னை யறிந்திலேன் இத்தனை காலமும்

என்னை யறிந்தபின் ஏதும் அறிந்திலேன்”

என்னும் மறைமொழிகள் அறிய, அறிவிப்பாரும் அறிவுப்பேறும் அறியவரும்,

“சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி

எனையாண்ட அத்தன்'

15

"தானேவந் தெனதுள்ளம் புகுந்

தடியேற் கருள் செய்தான்"

என்னும் மணிமொழிகளும் அம்மறை மொழிகளை மெய்ப்பிக்கும்.