உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214

இளங்குமரனார் தமிழ்வளம்

37

அறிகருவிகளாக இருக்கும் மெய், வாய், கண், மூக்கு, செவி என்பவை அளந்து அறிந்து அறியா என்றது என்ன? அறிந்தும் அறியாமை அதற்கு உண்டா? அறிவுறுதற்குக் கருவியாம் அவற்றுக்கே அறியாமை உண்டாயின், அறிந்துகொள்ள வகை தான் என்ன? என வினாவுதல் நிகழும். ஆயின் உண்மை ஈதேயாம். யானை, பெரியதே! வலியதே! விலைமானமும் மிக்கதே! ஏழைந்துக்குமேல் இரண்டு உயர்ந்த யானை-37 பெயர்களுடைய யானை - எனப் பாராட்டப்படுவதே! எனினும் என்ன? அதற்கு 'யானை' என்பது தன் பெயர் எனத் தெரியுமா? அவ்வாறே மெய் முதலியவையும் அளந்து அறிந்தும் அறியாவாம்.

இனி எதை அறியா? என்னும் வினாவுதல் எழும்.

மெய் வாய் முதலியவை உயிரின் துணையால் அல்லவோ ஒன்றை அறிகின்றன! உயிர்த் துணை இன்றி அறியக் கூடுமானால், உயிர் பிரிந்துபோன பின்னரும் மெய் வாய் முதலியவை ஊறு சுவை முதலியவற்றை அறிய வேண்டுமே! அவ்வாறு அறியக் காணாமையால் உயிர்த் தொடர்படைய அளவானே தாம். அவை அறி கருவிகளாக உள்ளன என்பது விளங்கும். ஆனால், அதனை மெய் முதலியவை அறிகின்றனவோ எனின் இல்லையாம். அன்றியும், தம்மையேனும் அறிகின்றனவோ எனின், அதுவும் ல்லையாம்! தம்மையும் அறியாமல் தம்மை இயக்கித் தொழிற் படுத்தும் ஆன்மாவும் அறியாமல் இருக்கும் குறைபாடு அவற்றுக்கு உண்மையால், ஆசிரியர் 'அளந்து அறிந்து அறியா' என்றார்.

விளம்பிய உள்ளத்து என்று உயிரைப்பற்றி உரைக்கத் தொடங்கிய ஆசிரியர் பொறிகளைப்பற்றி உரைப்பானேன் எனின், இப்பொறிகள் எப்படிக் குறையுடையனவோ அப்படிக் குறையுடையதே உயிரும் என்பதை நிறுவுவதற்காக உவமையாக எடுத்துக்காட்டப் புகுகின்றாராம். அதனை அடுத்துச் சுட்டு கின்றார்.

ஆங்கவை போலத் தாம், தம் உணர்வின் தமி அருள் (அறியா) :

மெய் வாய் முதலிய கருவிகள்போல உயிர்களாகிய தாம், தம் அறிவால் இறைவன் திருவருளை அறியமாட்டா என்பது பொருளாம். 'அறியா' என்பதை உயிருக்கும் கூட்டப் பெற்றதாம். ஊசல் இருபாலும் அசைவது போலவும், கடிகாரத் தொங்கல் இருபாலும் அசைவது போலவும், ஓரிடத்து நின்ற ‘அறியா' என்னும் சொல், ஈரிடத்தும் சென்று இயைந்து பொருள் தந்ததாம். தனை யாப்பியலார் 'தாப்பிசைப் பொருள் கோள்' என்பர்.