உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐந்தாம் நூற்பா

அறிந்த ஒன்றனைக் காட்டி அறியாத ஒன்றனை விளக்குவது, தெளிவுறுத்த விரும்புவார் எவருக்கும் வழக்கம். காட்டு எருமை காணா ஒருவனை, வீட்டு எருமை காட்டி 'இதுபோல்வது' என்று விளக்குவது போன்றதாம். இந்நெறியில் மெய்கண்டார் நான்காம் நூற்பாவில் சுட்டிக்காட்டிய பொருளை நினைவூட்டி அதன் வழியாகவே புதிய கருத்தை வலியுறுத்து வாராயினார்.

,

'விளம்புவது உள்ளத்து' என நூற்பாவைத் தொடங் கினார். 'சொல்லிய உள்ளத்தை'என்பது இதன் பொருளாம். உள்ளத்தையோ நான்காம் நூற்பாவில் கூறினார்? உயிரைப்பற்றி யல்லவோ கூறினார் எனத் திகைப்பு உண்டாகின்றது. இத் திகைப்பு கற்பார்க்கு ஏற்படல் ஆகாது என்றே 'தனுவினுள் ஆன்மா' என்று மூன்றாம் நூற்பாவில் குறித்தார். உள்ளின் உள்ளாக இருக்கும் உயிர்க்கு 'உள்ளகம்' என்று பெயர்; அது உள்ளம் எனவும் சொல்லப்படும். இதனை நான்காம் நூற்பா முகப்பிலும் உண்டோம்.

வையகம், வானகம், கானகம் என்பவை வையம், வானம், கானம் என வழங்குவனபோல், உள்ளகம் என்பது உள்ளம் என வழங்குகின்றதாம். 'ஓர்த்து உள்ளம் உள்ளது உணரின்' என்னு மிடத்தே பொய்யாமொழியாரும் உயிரை 'உள்ளம்' என ஆட்சி செய்துள்ள உண்மையை அறியலாம்.

ஆகலின், விளம்பிய உள்ளத்து என்பது முன்னே சொல்லிய உயிரை என்னும் பொருள்தருதல் விளங்கும்.

"மெய் வாய் கண் மூக்கு அளந்து அறிந்து அறியா'

வெற்றிலைபாக்கு என்ற அளவானே அதனொடு சுண்ணாம்பும் சேர்தல்போல, மெய் வாய் கண் மூக்கு என்ற அளவானே செவியையும் இணைத்துக்கொள்க. கற்பார் எளிமை யாகக் கண்டுகொள்ளத் தக்கவற்றைச் சுட்டிய அளவானே போதுமென்பதும், கற்பார் படிநிலை உயர்வைப் பளிச்சிடச் செய்தற்கும் இத்தகு உத்திகளை நல்லாசிரியர் கருதுவர் என்பதும் ஆய்வாளர் அறிந்ததே.