உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எட்டாம் நூற்பா

ஆன்மா உலகியல் அறிவு பெறுதலையும் இறையறிவு எய்துதலையும் முன் நூற்பாவிலே ஆசிரியர் சுட்டினார். இறை யறிவை எவ்வாறு எய்தும் என்பார்க்கு விளக்கு முகத்தான் இந்நூற்பாவை அருளினாராம்.

அனுமன் தன் வலிமை இன்னதென அறியாதிருந்தான்; "நீ நினைத்தால் விண்ணில் தாவவும் திங்களைப் பற்றவும் வலிமை யுடையை" என்று கூறக் கேட்ட அளவில், மேலே தாவினான் என்பது ஒரு கதை.

அருச்சுனன் போர்க்களத்தில் அயர்ந்தான்; வில்லைக் கீழே போட்டுப் போரொழிந்தான். மெய்ப்பொருள் உரைத்து மேற்கொள்ள வேண்டிய கடமையைக் கண்ணன் ஓதினான்; அருச்சுனன் வீறுபெற்றுக் கடனாற்றினான் என்பது கீதைச் செய்தி.

CC

அரசன் அமைச்சன் சூழ்ச்சியால் கொல்லப்பட்டான்; அரசி மயிற்பொறியேறித் தப்பி இடுகாட்டில் ஒரு மகனைப் பெற்றாள்; அம்மகனை ஒருவன் எடுத்து வளர்த்துவருவான் ஆயினான்" என்று ஆசிரியர் அச்சணந்தி கூற “அவன் யாவன்?” என்று சீவகன் வினாவ, "நீயே அவன் என்று"ஆசிரியர் உரைக்கச் சீவகன் வீறுகொண்டு வெற்றிகொண்ட செய்தி சிந்தாமணிக் கண்ணது.

இத்தகு செய்தி ஒன்றைச் சுட்டிக்காட்டித் 'திருவருள் குருவருளாக வருதலைச் சுட்டுகிறார் ஆசிரியர். குருந்தமர நீழலில் இறைவன் அருளாற்றலால் குருவினைக்கண்டு, கோயிற் பணியிலேயே ஊன்றி என்பெலாம் உருக்கவல்ல இன்ப அன்புத் திருப்பாடல் பொழிந்த மாணிக்கவாசகர் வரலாற்றுச் செய்தி இந்நூற்பாவின் பொருளாக அமைந்துள்ளதாம்.

ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்தெனத் தம்முதல் குருவுமாய்த் தவத்தினில் உணர்த்தவிட்(டு) அன்னிய மின்மையின் அரன்கழல் செலுமே.