உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226

இளங்குமரனார் தமிழ்வளம் - 37

இன்ப அன்புறும் அளவுக்குப் படியேறுதலும் கூடும் என்றும் அறிய வலியுறுத்தினார் ஆசிரியர் தொல்காப்பியர்.

"காமஞ் சான்ற கடைக்கோட் காலை

ஏமஞ் சான்ற மக்களொடு துவன்றி அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும் சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே'

99

என அவர் கூறுவார் (தொல். கற்பு. 51) இதில், தூயவாழ்வு நெறியின் முற்பகுதி, இம்மையின்பத் துய்ப்பும், பிற்பகுதி மறுமையின்பங்கருதிய கடைப்பிடியுமாதல் உணர்வார் ஆன்மாவின் இருதிறன் அறிவு நலங்களையும் அறிந்து மகிழ்வார்.

அசத்தை அறிவதும் சத்தால் அறிவிக்கப்பெறுவதும் ஆகிய ஆன்மா, 'சதசத்து' என்று சொல்லப்படும். சத்தும் அசத்தும் இணைதலால் பெற்றது அப்பெயர். அது தமிழில் 'நிலை அல் நிலை' என ஆறாம் நூற்பாவில் ஆளப்பெற்றது அறிக. நிலையாகிய சத்தும், அல்நிலையாகிய அசத்தும் ணைதலால் ‘நிலை அல் நிலை' எனல் முறையாம்.

நூற்பா:

யாவையும் சூனியம் சத்தெதிர் ஆகலின் சத்தே அறியா(து) அசத்தில் தறியா(து) இருதிறன் அறிவுள(து) இண்டலா ஆன்மா

றைவன் முன் உலகப் பொருள்கள் எல்லாமும் பொய்ப் பொருள்களேயாம். ஆதலால் இறை, அவற்றை மெய்யெனக் கொள்ளாது. அப்பொருள்களோ அறிவில்லாதவை; ஆதலால் அவை இறையையும் அறியமாட்டா. உலகியலில் தோய்ந்து உலகையும், இறையருளில் தோய்ந்து இறைமையையும் அறியும் தகவு ஆன்மாவுக்கே உண்டு என்பது இதன் பொருளாம்.

ஆன்மா அழிபொருள் அன்று; ஆயினும் அழிபொரு ளொடு கூடி அதனை அறியும். ஆன்மா இறையும் அன்று; ஆயினும் இறையருள் கூட்ட இறையறிவும் எய்தும். இத்தகும் அரிய ஆன்மநிலை வரப்பெற்றும் அதன் பயன் கொள்ளார் நிலை என்னே என்னும் ஆசிரியர் பேரிரக்கமே இப்போத'மாய் முகிழ்த்ததாம் என்க.