உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞானபோதம்

225

அசத்து இலது; (ஆகலின்) அறியாது :

தவை

அசத்து எனப்படும் உலகியற் பொருள்கள் நிலையில்லா மட்டுமன்றி, உயிரில்லாதவையுமாம். உயிருடைய வைக்கன்றோ அறிவு நலப்பேறுண்டு. அறிவு நலப்பேறுக்கு டமாகிய உயிர் தாமும் இல்லாத பொருள்கள், இறையை அறியுமோ என்று வினவ வேண்டுவதே இல்லை. அவை அறியமாட்டா என்பது தெளிவு.

இரண்டலா ஆன்மா :

உலகியற் பொருள்கள் என்றும், இறையென்றும் சுட்டப் பெற்ற இரண்டும் அல்லாதது ஆன்மாவாம். உலகியற் பொருள் களுள் ஆன்மா ஒன்று என்றால், அதற்கு உயிரில்லை. உயிரில்லை ஆகவே அறிவும் இல்லையாம். ஆன்மா இறையாம் என்னின், அறிவிக்க அறியும் சிறுமையுடையதில்லையாம். அது தானே அறியும் பெருமையுடையதாம். ஆதலால் இவ்விரண்டும் அல்லாதது ஆன்மா என்றார்.

இருதிறன் அறிவுளது :

ஆன்மாவின் அறிவுநிலை இன்னதென விளக்குவாராய் இரு திறன் அறிவுளது' என்றார் ஆசிரியர். இருதிறன் அறிவு என்பன உலகியல் அறிவும், இறையறிவுமாம்.

உலகியலில் அழுந்தி நிற்குங்கால் உலகியல் அறிவும், திருவருள் கூட்டுங்கால் இறையறிவும் ஆன்மா எய்துதல் உண்மையால், 'இருதிறன் அறிவுளது' என்றார்.

உயிர், உலகையும் அறியும்; இறையையும் அறியும் என்றும் உயிர் உலகாலும் அறிவுறும், இறையாலும் அறிவுறும் என்றும் கொள்ளக் கிடக்கின்றது. 'இருதிறன் அறிவுளது' என்னும் இத்தொடரமைதி.

இன்பத்தை இரண்டாக வகுத்தனர். அவை, இம்மை இன்பம் மறுமை இன்பம் என்றும், சிற்றின்பம் பேரின்பம் என்றும் குறிக்கப்படுவன. இவ்விருவகை இன்பமும் துய்த்தற்கு ஆன்மாவின் நிலை இடனாக உள்ளது. உலகியலில் தோய்ந்து நின்று இம்மையின்பம் எய்துதற்கும், றையருளில் தலைப் பட்டுத் துறக்க இன்பம் அல்லது மறுமை இன்பம் எய்துதற்கும் ஆன்மாவால் கூடும் என்றும் முதல்நிலை குடும்ப இன்ப அளவே அளவாய் அமைதலும் நிறைநிலை உயிரெலாம் தளிர்ப்புற