உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

<

230

இளங்குமரனார் தமிழ்வளம் -37

இணைந்தும் பொருள் தருகின்றதாம். விட்டு அன்னியம் இன்மையாவது விடுத்து அயலாய் நில்லாமை. உயிரின் தன்மை அயலாய் நில்லமை அல்லது தனித்து நில்லாமையாம். உயிர் உலகைச் சார்ந்து நிற்கும்; அச்சார்பு விட்டால் இறையைச் சார்ந்து நிற்கும். இரண்டுள் ஒன்றைச் சாராமல் இருத்தல் அதற்கு இயல்வு இல்லையாம். இலையோ காயோ கனியோ மரஞ்செடி கொடிகளோடு ஒட்டிக்கொண்டிருக்கின்றன. அவற்றின் பற்று விட்டால் ஆங்கிருந்து வீழ்ந்து நிலத்தைச் சேர்கின்றன.

கயிற்றிலோ தொடரிலோ (சங்கிலியிலோ) பிணைப்புற்று ஆடிக்கொண்டிருக்கும் ஊசல், கயிறோ தொடரோ அறுந்தால் நிலத்தையே சேர்கின்றது. இவற்றைப்போல் உயிரும் உலகச் சார்பை விடுத்தால் இறைச்சார்பை எய்திநிற்கும். இதனை, ஒன்றி உடனாதல் என்பர். ஆளுடைய பிள்ளையார் இறைபடி எய்தியமை சுட்டும் சேக்கிழார். "போதநிலை முடிந்தவழிப் புக்கு ஒன்றி உடனானார்" என்று கூறினார். ஒன்றி உடனாதல் என்பதே. மொழியும் தமிழும் கூடிய இரு பிறப்பியாய்.'விட்டு அன்னியமின்மை' எனப்பட்டது. இதனை ‘அநந்நியமாதல்' என வடமொழியால் குறிப்பர்.

முந்தை ஏழு நூற்பாக்களிலும் இறையை ஒடுங்கி, சிவசத்து, சத்து என்று கூறிய அளவின் அமைந்த ஆசிரியர், இந் நூற்பாவில் முதல்' என்றும், 'அரன்' என்றும் சுட்டுகிறார். ஒன்றி உடனாந் தன்மையால் உயிர். அரன் கழலில் ஒன்றும் என்றார். 'அரன்' என்பதும் 'சிவன்' என்பதும் 'சேய்' சேயோன் என்பனவும் ஒரு பொருள் தரும் சொற்களே. இச்சொற்கள் சிவப்பு என்னும் அடியில் பிறந்தனவே. சிவன், சேய், சேயோன் என்பவை சிவப்பின் அடியில் பிறந்தவை எனலாம்; ஆனால், அரன் என்பதுவும் சிவப்பின் அடியாகப் பிறந்ததுவோ எனின் 'ஆம்' என்பதே மறுமொழியாம்.

'அர்' என்பது சிவப்புப் பொருள்தரும் ஒரு வேர். அர்+அன் = அரன் என்பதும் சிவப்பன். சிவன் என்னும் பொருள் தருவதே. அரக்கு, அரத்தம், அரணம், அருணன், அரி முதலிய சொற் களெல்லாம் செம்மைப் பொருள் தரும் 'அர்' என்னும் வேர் வழிச் சொற்களே. அரக்காம்பல், அரத்தப்பட்டு, அரத்தம் முதலிய சொற்பொருளை அறிவார் அரன் என்பது சிவன் என்பதன் மற்றொரு வடிவச் சொல் என்பதை அறிவர். சேயோன் வழிபாடே சிவன் வழிபாடாய், செங்கதிர் வழிபாடாய் நிற்பதுவும் அறிவர். வேர்ச்சொல் பொருள் ஆயத் தலைப்பட்டார் 'ஹரன்'