உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞானபோதம்

231

என்பதே அரனாயிற்று என ஏமாற்றமுறார். முழுமுதல் இறைவனை ஒரு தொழிற்படுத்த ஒவ்வார். ‘அர்' என்னும் வேர்வழிச் சொற்கள் மிகப் பலவாதலின் இந்நூற் பொருளமைதிக் கேற்ப இவ்வளவில் அமைவாம்.

இந் நூற்பாவில், "உயிரோடு உயிராய் இருக்கும் இறைவன் உயிர் செய்த தவப்பேற்றின் முருகுதலால் குருவுமாகி வந்து, "ஐம்புலன்களாகிய வேடருக்குள் நின்னை மறந்து வளர்ந்தாய்; நின் பெருமையை அறிக" என்று அறிவிக்க, அவ்வேடர்களை விடுத்துப் பண்டே ஒன்றியுடனாந்தன்மையால் முதல்வன் திருவடியை உயிர் அடையும் என்னும் கருத்துகளை ஆசிரியர் அறிய வைத்தார்.