உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்பதாம் நூற்பா

உயிரை உய்ப்பதற்காக இறைவன் குருவாக வந்து அருள் தலையும், உயிர் இறைவன் திருவடி நிழலை அடைதலையும் சுட்டிய ஆசிரியர் இவ்வொன்பதாம் நூற்பாவில் உயிர் இறைவன் திருவடியை அடைதற்குரிய வழிமுறைகளைச் சொல்கின்றார்.

அறிவு மூவகைப்பட்டு நிற்றலை முன்னரே கண்டோம். அவை உலக அறிவு, உயிர் அறிவு, இறை அறிவு (பாசஞானம், பசுஞானம் சிவஞானம்) என்பன.

இவற்றுள் உலக அறிவு, செயற்கை அறிவென்றும்,உயிர் அறிவு, இயற்கை அறிவென்றும் குறிக்கவும் பெறும்.

உலக அறிவாம் செயற்கை அறிவு, கல்வி கேள்விகளால் உண்டாவது. உயிரறிவாம் இயற்கை அறிவு, உடற்கூறு, வழிமுறை, சூழ்நிலை ஆயவற்றால் அமைவது.

இவ்விரு வகை அறிவுக்கும் மேம்பட்டது இறையறிவு. முன்னை இருவகை அறிவாலும் இறைவனை உணரமுடியாது. இறையறிவாலேயே இறைவனை உணரமுடியும். திருவருள் கூட்ட இறையறிவு வாய்க்கப்பெற்றார்க்கே அகநோக்கு நோக்குதலும், மலநீக்கம் ஆகுதலும் வாய்க்கும். இறையறிவு வாய்க்கப்பெற்றாரும் அவ்வறிவை நிலைபெறுத்திக் கொள்வதற் காக இறைவனின் திருவைந்தெழுத்தை இடையறாது ஓதுதல் வேண்டும் என்றும் ஆசிரியர் அருள்கின்றார்.

ஊனக்கண் பாசம் உணராப் பதியை ஞானக் கண்ணினில் சிந்தை நாடி

உராத்துனைத் தேர்த்தெனப் பாசம் ஒருவத் தண்ணிழ லாம்பதிவிதி எண்ணுமஞ் செழுத்தே.

என்பது நூற்பா.

தனை, ஊனக்கண் உணரா பதியை ; பாசம் உணரா பதியை ; ஞானக் கண்ணினில் சிந்தை நாடுக; உராத்துனைத் தேர்த்தெனப் பாசம் ஒருவத் தண்ணிழலாம் பதி; எண்ணும்