உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238

இளங்குமரனார் தமிழ்வளம் - 37

"அவனே தானே ஆகிய அந்நெறி

ஏக னாகி இறைபணி நிற்க

மலமாயை தன்னொடு வல்வினை இன்றே'

என்பது நூற்பா.

அவனே தானே ஆகிய அந்நெறியில் ஏகனாகி இறைபணி நிற்பார்க்கு, மலமாயைகளொடு வல்வினையும் இல்லையாம் என்பது. இதன் சுருக்கக் குறிப்பாம்.

அவனேதானே ஆகிய அந்நெறி

அவனாவான் இறைவன்; தானாவான் ஆன்மா. திருவருளால் மெய்ப்பொருள் அறிவு தலைப்பட்டு, உள்ளகம் நோக்கி ஆய்ந்து படிநிலையேனும் உயிர் தன் செயற்கும் பணிநலப் பேற்றுக்கும் மூலமும் முதலுமாகி, தம்முதல் குருவுமாகி, தவந்தலைக்கூட்டித் தன்னொடும் ஒன்றுவிக்கும் இறைவனே முழுமுதற் காரணன் என்பதை அறிந்து கொள்வன. அதனால் அவ்விறைவன் திருவருளே, தன்னை இயக்கும் தகவினை உருகி உருகி நினைந்து தன்னை மறந்து எல்லாம் அவனே, அவன் அருளே; அவன் செயலே; அவனன்றித் தான் என்றோ தனது என்றோ ஒன்றும் இல்லை என்னும் மேலீட்டைப் பற்றிக் கொள்வான். அந்நிலையில் அவனே தானே ஆகிய இறைநெறியில் ஒன்றிப்போவான். ஒன்றிய அவன், மேல் என் செய்வனோ எனில், ஏகனாகி இறைபணி நிற்பனாம்.

அவன் என்றும் தான் என்றும் எண்ணப்பட்ட இருமை நீங்கி அவனே தான் என்னும் ஒருமைநிலை உறுவன். அதுகால் தன் சிந்தை. தன் சொல், தன் செயல் எல்லாமும் இறைபணி என்றே கடைப்பிடிப்பான்.

இவ்வினை யான் செய்தேன்; இதன்பயனீடு இன்னது என்று எண்ணும் ஆன்ம முனைப்பு அகன்று, இறையருளால் இதனைச் செய்தேன்; இதன் பயனீடு நன்றாயின் என்ன; அன்றாயின் என்ன; அவனே பொறுப்பாளி; வில்லை, வளைத்து ஏவுகின்றான் வில்லாளி; அம்பாய்ச் செல்கின்றேன் யான்; வில்லாளியின் குறியும் வினையுமே அம்பை இயக்குவது போல இறைவன் இயக்க இயங்கும். எனக்கென வினையொன்று இல்லை என்று அவன் மேல் சுமையைப் போட்டுவிட்டுச் செல்கின்றான். அவ்வாறு செல்வானுக்கு மலம் என்ன செய்யும்? மாயை என்ன செய்யும்? இருவினைதான் என்ன செய்யும்? எல்லாமும் சென்று, நெருங்கவும் மாட்டாத இடத்தில் நிற்பானை என்ன செய்துவிட