உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞானபோதம்

239

முடியும்? தோல்விகண்டு தொலைகின்றன. ஆகலின், ஆசிரியர், "மலமாயை தன்னொடு வல்வினை இன்றே" என்றார்.

சோரி உள்ள இடத்தே நீர் உள்வாங்கும்; அளறு உள்ள டத்தே கால் உள்வாங்கும்; தொய்யும் நைவும் உள்ள இடத்தே காற்றுருளை (Tyre) வெடிக்கும். வலிய இடத்தே இவற்றின் வாலாட்டத்திற்கும் இடமில்லை அல்லவோ?

இறைவன் ஆட்கொள்ளப் பெறுதலால், "அவனே தானே ஆகிய அந்நெறியில் ஏகனாகி இறைபணி" நின்ற மாணிக்கவாசகர்.

'அன்றே என்றன் ஆவியும்

உடலும் உடைமை எல்லாமும்

குன்றே அனையாய் என்னையாட்

கொண்ட போதே கொண்டிலையோ இன்றோர் இடையூ றெனக்குண்டோ எண்தோள் முக்கண் எம்மானே நன்றே செய்வாய் பிழைசெய்வாய் நானோ இதற்கு நாயகமே’

என்று பாடும் பாட்டிலே இந்நூற்பாவின் இலக்கியமாக அவர் வாழ்வு அமைந்திருத்தலைச் சுட்டியுள்ள அருமை எண்ணி எண்ணி இன்புறத்தக்கதாம்.

பசிப்பிணி தீர்க்கும் மருத்துவியாகத் திகழ்ந்த மணிமேகலை யார் காணார் கேளார் கால்முட மாயோர். பேணா மாந்தர் பிணிநோய் உற்றார் யாவரும் வருக" என்று அழைத்து உணவூட்டுங்காலை, 'ஆபுத்திரன்கை அமுதசுரபி இஃது' என்று கூறி அறப்பேற்றுப் பயனைத் தாம் கொள்ளாது ஆபுத்திரனுக்கு அருளிய திறமும், தம் கைப்பொருள் கொண்டு செய்தாராயினும் நாவுக்கரசர் நற்பெயராலேயே சாலை, சோலை, நீர்ச்சாலை எல்லாமும் அமைத்துப் புகழும் விரும்பாப் புகழ்மையில் இலங்கிய அப்பூதியடிகளார் திறமும் 'இறைபணி' நின்ற சீர்மைகட்கு எடுத்துக்காட்டுகளாம்.

ஓர் உயிர் துடிக்கும் துடிப்பைக் காண பொறுக்காமல் ஓர் உயிர் ஓடிச் செய்யும் உதவியே மருத்துவம் என்பதை மெய்ப் பித்துக் காட்டிய ஆல்பிரட்டு சுவைட்சரும், இடருக்கும் இன்னலுக்கும் ஆட்படுவோர் எங்கிருப்பினும் அங்கிருப்பேன் யானென ஓடிப்போய் உதவும் தெரசா அன்னையாரும் இறைபணி