உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250

י,

இளங்குமரனார் தமிழ்வளம் 37

"சீரடியார் பிறந்து வளர்ந்த இம் மண்ணிலே காலடியும் படுதல் ஆகாது என்று புறம்போய்நின்று வழிபட்ட அடியார் வரலாறு பெரியபுராணத்தில் காணப்படுவதேயன்றோ! அவர் மண்ணை மதித்த மதிப்பு அத்தகையது. "பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும், நற்றவ வானினும் நனிசிறந் தனவே" என்னும் எண்ணம், தெய்வநிலை எண்ணமேயாம்.

வாழ்வாங்கு வாழ்ந்தவராக மதிக்கப்பெறும், பெருமக்கள் வாழ்ந்த திருமனையை, அவர்தம் நினைவுக்குறியாக்கி, அவர்தம் புகழ் உடலாக அதனைப் போற்றி வருவதில் பெருமுனைப்புக் காட்டும் இந்நாள் நடைமுறையை எண்ணுவார், இறைவன் கோயில் கொண்ட த்தை இறைவனாகக் கருதி வழிபடுதல் புதுப் பொருளாகவோ, புதுமைப் பொருளாகவோ கொள்ளார்.

உறைதல்) அடியாரையும்

-

அன்பராதல் அன்பரொடு மருவுதல் (அடியார் குழாத்து ஆலயத்தையும் இறையாகவே கொண்டு வழிபடுதல் என்பவை ஒன்றின் ஒன்று உயர்ந்து சென்று ஒருபேரிறையோடு ஒன்றி உடனாந் திருவை அருளும் என்பதை உய்வார் உய்யும் வண்ணம் மெய்கண்டார் உரைத்தருளி நூலை நிறைவித்தார்.

"யாம்பெற்ற இன்பம் உலகும் பெறுக" என்று வழி காட்டுவது பேரருளாளர் நிறைபெரும் இறைபணி யாம் ஆதலால்

என்க!

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு.

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு.