உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருணைக் கலம்பகம்

85

(பொ-ரை.) அண்ணாமலைப் பெருமானே, குறையற்ற வரே, நல்ல வசந்த விழாக் கொள்ளும் அழகரே, நினைத்த முத்திப்பேறு அருள்பவரே, மலைமேல் உறையும் மருந்து போன்றவரே, நும் திருத்தோளைத் தழுவிக் கிடக்கும் மாலையும் செவ்விய கொன்றையேயாம்; நும்பால் அன்பு பூண்ட கயல் போன்ற கண்ணையுடையாளும் செவ்விய இதழை உடைய வளேயாம்; வியப்புறக் கூறினால் அம் மாலையும் பொன்னிற மேயாம்; எங்கள் மின்னற்கொடி போன்ற இவள் நிறமும் பொன்னிறமேயாம்; நும் தோளைத் தழுவும் பேறு பெறாமல் - நும் கொன்றைமாலை பெற்ற பேற்றைப் பெறாமல் வாடுதல் தகுமோ? நீவிர் திருக்கண் பார்த்து அருள் செய்வீராக.

(வி-ரை.) இப்பாடல் தோழி, தலைவன் வேண்டல் என்னும் துறையமைதியுடையது. தலைவன் - அண்ணாமலை யார். அண்ணாமலையாரைக் கண்டு மையல் கொண்ட தலைமகள் அவரால் தழுவப்பெறும் பேறு பெறாமல் பசலையுற்றாளாகத் தலைவி குறையிரந்து அருள வேண்டியது இஃதாம்.

கொன்றை மாலையைச் சுட்டியது அதனை உவந்து ஏற்றுக் கொண்ட பெருமான், அத் தன்மை யமைந்த தலைவியை ஏற்றிலனே என்ற குறிப்பாலாம்.

பொன்நிறம் என்றது தலைவியின் பசலை நோயை, செவ்விதழி என்றது செவ்விய கொன்றையையும், செவ்விய இதழையுடைய தலைவியையும்; மயக்கமும், பெருமையும்.(14)

மால்

-

15. மொழி சூள் மறந்த பிழை

இரங்கல்

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்

மலைமேல் மருந்தர் அருணேசர் அன்று

வலைவீ சிநின்ற அலையே

அலைமேல் நிறைந்து வருமீன் அருந்தி

அருகே இடங்கொள் குருகே முலைமேல் முயங்கு தலைநா ளிலன்பர்

மொழிசூள் மறந்த பிழையோ

தலைமேல் வரைந்த படியோ இருந்து

தமியேன் வருந்து தகவே.