உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

இளங்குமரனார் தமிழ்வளம் -38

(பொ-ரை.) மலைமேல் உள்ள மருந்து போன்றவராகிய அண்ணாமலையார், அந்நாளில் வலைவீசி நின்ற கடலே! அலைகளின்மேல் நிறைந்து வரும் மீன்களையுண்டு கடலின் அருகே வாழ்கின்ற பறவைகளே! யான் எத்துணையுமின்றித் தனியே இருந்து வருந்தும் முறைமை. என் மார்பகங்களைத் தழுவக் கூடிய முதல் நாளில் தலைவர் கூறிய உறுதிமொழியை மறந்துபோன பிழையோ, அன்றி என் தலைமேல் எழுதிய வண்ணமோ அறியேன்.

(வி-ரை.) இரங்கல் -வருந்துதல்; தலைவனைப் பிரிந்து தனித்த தலைவி கடலையும், கடல்வாழ் பறவையையும் விளித்து இரங்கிக் கூறியதாகும். இரங்கல் நெய்தற்றிணைக்குரியதாகலின் அந் நிலத்தையும், அந் நிலத்துப் பறவையையும் சுட்டினார்.

சொல்லாதனவும் வன போலவும், கேளாதனவும் கேட் குந போலவும் கூறுதல் தொன்னெறியாம் (தொல். செய்.

201.)

அருணேசர்

வலைவீசி நின்றது, திருவிளை ளயாடற் புராணத்து வலைவீசிய படலத்தில் கண்டது. அச் செய்தி வருமாறு:

முன்னொரு காலத்தில் சிவபெருமான் உமையம்மைக்குத் திருமறையை ஓதினார். அதனை அம்மை கருத்தின்றிக் கேட்டார்; ஆதலால் சினங்கொண்ட பெருமான் 'நீ வலைஞர் மகளாக' எனச் சாபமிட்டார். அதனை அறிந்த மூத்த பிள்ளையாரும், முருகவேளும் வெகுண்டு மறைகளை வாரிக் கடலில் எறிந்தனர். அவ்விருவரையும் காலம் அறியாமல் உள்ளே வரவிட்ட நந்தியை 'மீனாக' என்றும், முருகவேளை 'மூங்கையாக' என்றும் சாப மிட்டார். பின்னர்த் தாம் வலைவேடராகி நந்தியாம் மீனை வலைவீசிப் பிடித்து, உமையை மணஞ் செய்து கொண்டார்.(15) 16. அமரரும் நரரும் கலக மிடுவர் தலைவியைப் புகழ்தல்

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்

தகன முறுவலின் மதனை முனிபவர்

சடையில் அணிபல தலையினார்

அகனல் அடியரொ டுறையும் இறையவர் அருணை வளநகர் அரிவையார்