உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருணைக் கலம்பகம்

87

நிகரில் தனதட அமுதம் நிறைகுடம் நிலவு முகபடம் விலகினால் ககன அமரரும் நரரும் இகல்கொடு

கலகம் இடுவரிவ் வுலகிலே.

(பொ-ரை.) எரிக்கும் சிரிப்பால் மன்மதனைக் காய்ந்த வரும் சடையில் அணிந்த பல தலைகளை உடையவரும் நல்லுளம் வாய்ந்த அடியவர்களுடன் உறையும் கடவுளரும் ஆகிய சிவபெருமான் கோயில் கொண்ட வளமிக்க அருணைநகர் தலைவியரது ஒப்பற்ற மார்புகளாகிய பெரிய அமுதம் நிறைந்த குடங்களின்மேல் விளங்குகின்ற ஆடை சிறிது விலகினால் விண்ணகத்துத் தேவரும், மண்ணகத்து மாந்தரும் பகைமேற் கொண்டு இவ்வுலகில் சண்டை செய்வர்.

(வி-ரை.) மதனை முனிதல் என்பதில் காமனைக்காய்ந்த வரலாறு சுட்டப்பெற்றது. 'தனதடம் அமுதம் நிறைகுடம்' ஆதலால்,அமரர் அமிழ்தம் 'எம்மதே' என்று போரிடவும், மண்ணகத்து மகளாதலால் நரர் 'எம்மவளே' என்று போரிட வும் ஆயினர் என்க. நிலவும் அமைந்து விளங்கும்; முகபடாம் என்றது மூடிய ஆடைத்துகிலை; ககனம் - விண் அகனல் என்பதை அகம் நல் எனப் பிரித்து நல் அகம் என் மாற்றுக. தலைவன், தலைவியின் உறுப்பு நலம் புகழ்ந்துரைத்தது இது. (16)

-

17. மொழியும் விழியும் மாசுகமே இதுவும், தலையைப் புகழ்தல் எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்

உலககண் டகனாய் வருசலந் தானார்

உடல்தடிந் திடுவார், கடல்விடங் கொளுவார்

குலவுசங் கரனார் அருணையங் கிரிசூழ்

குளிர்புனந் தனிலே கிளிகடிந் திடுவார்,

மலர்முகம் சசியே; வடிவமும் சசியே;

மகரமென் குழையே; வருணமென் குழையே;

முலையுமந் தரமே; இடையுமந் தரமே;

மொழியுமா சுகமே; விழியுமா சுகமே!

(பொ-ரை.) உலகோரைத் துயர் செய்பவனாக வரும் சலந்தரா சுரனது உடலைப் பிளந்தவரும், கடலில் தோன்றிய