உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

இளங்குமரனார் தமிழ்வளம்-38

நஞ்சை உண்டவரும் ஆகிய சங்கரனார் விளங்கும் அண்ணா மலை சூழ்ந்த குளிர்ந்த தினைப்புனத்திலே கிளி ஓட்டுமவர் மலர்போன்ற முகம் நிலவேயாம்; வடிவமும் இந்திராணி யேயாம்; சுறாமீன் வடிவில் அமைந்த குண்டலங்களும், அழகிய மெல்லிய தளிரேயாம்; மார்பும் மந்தர மலையேயாம்; இடையும் விண்வெளியேயாம்; இனிய மொழிகளும் கிளிமொழியேயாம்; கண் விழிகளும் அம்பேயாம்.

(வி-ரை.) சலந்தரனார் உடல் தடிந்ததும், கடல் விடங் கொண்டதும் சங்கரனார் செயல்கள் கிளிகடிந்திடுவார் என்றது தலைவியை, சசி என்பதற்கு நிலவும், இந்திராணியும் பொருள். முதற்குழை காதணியையும் மற்றது தளிரையும் குறித்தது. மந்தரம் என்பது மந்தரமலையையும், அந்தரம் என நின்று விண்வெளியையும் குறித்தது. இடை உண்டோ இல்லை யோ என்பது நூன்முறையாகலின், உண்டு எனத் தோன்றி இல்லாமல் இருக்கும் விண்ணை இடைக்கு ஒப்பிட்டார். மாசுகம் என்பது கிளியையும், ஆசுகம் எனப் பிரிந்து அம்மையையும் குறித்தது. சலந்தரனார் உடல் தடிந்த வரலாறு காஞ்சிப் புராணம் சலந்தரீசப் படலத்துக் கண்டது. அது வருமாறு:

சலந்தரன் அனைவரையும் வென்று கயிலாயம் நோக்கி சென்றான். சிவபெருமான் ஒரு முதிய அந்தணர் வடிவுடன் முன்வந்து நிலத்தில் ஒரு சக்கரம் வரைந்து எடுக்கச் சொன்னார். சலந்தரன் நிலத்தைப் பிளந்து சக்கரத்தை எடுக்க அஃது தலையைப் பிளந்தது. (17)

18. சுகமே! சுகமே இரும் இரங்கல்

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்

சுகமே! சுகமே இரும்,வந் துபுனஞ்

சூழ்கின் றவுமை தினமித் தினையுள்

புகமே யலிடா துகடிந் திடுமெம்

பொல்லா மையமின் றுபொறுத் திடுமின்;

மகமே ருநெடுஞ் சிலையாள் அரணா

மலையார் அருணா புரிமால் வரைமேல்

அகமே செலுமா றுதுணிந் திதண்விட்

டகல்துன் பமுமன் பர்வரிற் சொலுமே.